For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

13 பேர் படுகொலைக்கு ஸ்டெர்லைட் ஆலை தொடங்க அனுமதித்த திமுகதான் காரணம்: பொன். ராதாகிருஷ்ணன் 'பொளேர்'

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை அமைக்க அனுமதித்தது திமுகதான் என்கிறார் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

By Mathi
Google Oneindia Tamil News

Recommended Video

    ஆளுங்கட்சி மீது கோபப்பட்ட பொன் ராதா-வீடியோ

    சென்னை: தூத்துக்குடியில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டதற்கு காரணமே ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க அனுமதித்த திமுகதான் என சாடியுள்ளார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.

    சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

    தூத்துக்குடியில் மக்கள் அமைதியாக போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் திடீரென கலவரம் ஏற்பட்டு 13 பேர் பலியாகி இருப்பது மிகவும் வேதனைக்குரியது.

    மக்கள் நம்பாதீர்

    மக்கள் நம்பாதீர்

    இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு அனுமதி கொடுத்ததே மத்திய அரசுதான் என பொய் பிரசாரம் செய்கின்றனர். இத்தகைய பொய்களை மக்கள் ஒருபோதும் நம்பவேண்டாம்.

    பாஜகவின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு

    பாஜகவின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு

    ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி கொடுத்தது திமுக, காங்கிரஸ் அரசுகள்தான். அதனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடக்கத்திலே போராடினோம்.

    அனுமதித்த காங்கிரஸ்

    அனுமதித்த காங்கிரஸ்

    ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்துக்கு அனுமதி கொடுத்ததும் மத்திய காங்கிரஸ் அரசுதான். மத்திய அமைச்சர்களாக இருந்த ஜெய்ராம் ரமேஷ், ஆ ராசா ஆகியோர்தான் இதற்கு பொறுப்பு.

    தமிழர் விரோத காங்கிரஸ்

    தமிழர் விரோத காங்கிரஸ்

    ஸ்டெர்லைட் மட்டுமல்ல, நியூட்ரினோ, ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கும் அனுமதி தந்தது திமுக, காங்கிரஸ்தான். சோனியா காந்தி காலத்தில் இருந்தே தமிழினத்துக்கு துரோகம் செய்த கட்சி காங்கிரஸ்தான்.

    மத்திய அரசு விரைவில் நடவடிக்கை

    மத்திய அரசு விரைவில் நடவடிக்கை

    இதை மறந்துவிட்டு ஆர்.எஸ்.எஸ்.தான் காரணம் என ராகுல் காந்தி கூறுவது வேடிக்கையானது. எந்த ஒரு நடவடிக்கையுமே மேற்கொள்ளாத தமிழக அரசு மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

    English summary
    Union minister Pon Radhakrishnan has slammed that the DMK over the Sterlite issue.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X