என் சொத்துமதிப்பு எப்படி ரூ.2.98 கோடி அதிகரித்தது?: பொன். ராதாகிருஷ்ணன் விளக்கம்
நாகர்கோவில்: தனது சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதற்கான காரணத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர்கள் சிலரின் சொத்து மதிப்பு கடந்த 5 மாதங்களில் அதிகரித்துள்ளது என்று தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்தது. அதில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் சொத்து மதிப்பு ரூ. 2.98 கோடி அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில்,

கடந்த ஏப்ரல் மாதம் வரை என்னிடம் இருந்த சொத்துவிவரங்களை லோக்சபா தேர்தலின்போது வேட்புமனு தாக்கல் செய்கையில் தெரிவித்தேன். அண்மையில் என் குடும்ப சொத்து பிரிக்கப்பட்டது. அதில் என் பங்கு எனக்கு கிடைத்தது. அதனால் தான் என் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
இது குறித்து நான் பிரதமர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளேன். தூய்மையான பாரதத்தை உருவாக்க முயற்சி செய்யும் மோடி அமைச்சரவையில் இருக்கும் நானும் தூய்மையானவனாக இருக்க முடிவு செய்துள்ளேன். என் சொத்து விவரங்கள், வருமானம் குறித்து மத்திய அரசுக்கு தெரிவித்துவிட்டேன்.
குமரி மேற்கு மாவட்டத்தில் ரப்பர் விலைவீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து மனு அளித்துள்ளேன். ரப்பர் விலை வீழ்ச்சியை தடுக்க தக்க நடிவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications