2 மணி நேரத்தில் முடிவு தெரியும் என்றார் பொன்னையன்.. பலமணி நேரமாகியும் ஒன்னும் தெரியலையே!!
பொன்னையன் 2 மணி நேரத்தில் முடிவு தெரியும் என நேற்றிரவு கூறியிருந்தார். ஆனால் இதுவரை எந்த முடிவும் தெரியவில்லை.
சென்னை: சசிகலா முதல்வராக பதவியேற்பாரா என்பது குறித்து 2 மணி நேரத்தில் முடிவு தெரியும் அதிமுக செய்தி தொடர்பாளர் பொன்னையன் கூறியிருந்தார். ஆனால் இதுவரை எந்த முடிவும் தெரியவில்லை என மக்கள் முனுமுனுக்க தொடங்கியுள்ளார்.
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா நேற்று கவர்னர் வித்யாசாகர் ராவை தனித்தனியாக சந்தித்தனர். கவர்னரை முதலில் சந்தித்த முதல்வர் ஓபிஎஸ், தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து நல்லதே நடக்கும் என்றார்.

ஆனால் கவர்னரை சந்தித்த சசிகலா இருண்ட முகத்துடனே சென்றார். செய்தியாளர்களையும் சந்திக்கவில்லை. இதைத்தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் போயல்கார்டனில் இருந்து வெளி வந்த பொன்னையன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது இன்னும் 2 மணிநேரத்தில் முடிவு தெரிந்துவிடும் என்றார். ஆனால் இதுவரை எந்த முடிவும் தெரியவில்லை. மன்னார்குடி தரப்பு அமைதி காப்பதைப் பார்த்தால் ஆளுநர் அவர்களுக்கு எந்த சாதகமாக எதுவும் கூறவில்லை எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications