நச்சுன்னு நங்கூரத்தை போட்ட பொன்.ராதா.. ரஜினிக்கு பகிரங்க அழைப்பு.. பாஜகவுக்கு வருவாரா!
Recommended Video
சென்னை: ரஜினி பாஜகவில் சேர வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் ஒரு நங்கூரத்தை நச்சென இப்போது போட்டுள்ளார். இவ்வளவு காலம் இல்லாமல் இப்போது ஏன் பொன்.ராதா ரஜினியை அழைக்க வேண்டும்? எல்லாம் காரணமாகத்தான் என்கிறது அரசியல் வட்டாரம்!
ரஜினியின் அரசியல் வருகை குறித்து பலரும் பல கருத்துக்களை ஏற்கனவே தெரிவித்து விட்டனர். ரஜினி வந்தால் எங்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்கிறது அதிமுக.. "ரஜினி திமுகவுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுக்க மாட்டேன்.. ஆனால் வந்தால் வரவேற்பேன்" என்கிறார் ஸ்டாலின்.
"இல்லை.. இல்லை.. ரஜினி தனி கட்சி தொடங்குவார், யாருடனும் கூட்டணி வைக்க மாட்டார்" முந்திகொண்டு சொல்கிறார்கள் திருநாவுக்கரசு, கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர்!

பாஜக
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் பாஜக தரப்பு ரஜினியை கூப்பிட்டு கொண்டுதான் இருக்கிறது. அமித்ஷா அழைத்துவிட்டார்.. தமிழிசையும் அழைப்பு விடுத்தார்.. ஆனால் ரஜினி பக்கம் சத்தமே இல்லை. இந்நிலையில் ரஜினிக்கு கடிவாளம் போடும் வகையில் முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் பேசியுள்ளார்.

விருப்பம்
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,"நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால், அதை நான் வரவேற்கிறேன். ஆனால், அவர் பா.ஜ.க-வில் சேர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். தமிழகத்தில் உள்ள எட்டு கோடி மக்களும் பாஜக-வில் சேர வேண்டும் என்பதுதான் எப்போதும் என்னுடைய விருப்பம். அதுபோல, ரஜினியும் பாஜகவில் இணைய வேண்டும்" என்று மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளார்.

பிடி தரவில்லை
ஏனெனில், மாநில பாஜக தலைமை பதவி காலியாக இருக்கிறது. அந்த இடத்தில் ரஜினியை அமரவைக்க தேசிய தலைமை முயற்சித்து வருவதாக ஒரு தகவல் வெளியானது. இதற்காக அமித்ஷா பல்வேறு வகைகளில் முயற்சித்து வருவதாகவும், ரஜினிதான் அதற்கு பிடிகொடுக்கவில்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது.

தாமரை
பாஜக இந்த அளவு ரஜினியின் வருகையை எதிர்நோக்க காரணம், தமிழகத்தில் தாமரையின் மொட்டு கூட தென்படவில்லை. அந்த தாமரையை தேடி பிடித்து ரஜினி மலர வைப்பார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. அது மட்டுமில்லாமல், கருத்தியல் ரீதியாகவும் ஒத்துப்போவதால், உச்ச நட்சத்திரத்தை பயன்படுத்தி பாஜக அடித்தளமிட முயன்று வருகிறது. அதனால் பொன்.ராதா இப்படி ஒரு கடிவாளத்தை திரும்பவும் போட்டுள்ளார்.

வருவாரா?
இது எல்லாவற்றையும் விட கஜா புயல் நிவாரணத்தை ரஜினி இவ்வளவு நாள் இல்லாமல் கையில் எடுத்துள்ளதும் ஏன் என்று தெரியவில்லை.. எதுவும் விரைவில் தெரிந்துவிடும்!
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications