ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை: பூஜைப் பொருட்களின் விற்பனை ஜோர்
சென்னை: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை முன்னிட்டு பூஜைப் பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை கொண்டாட மக்கள் தயாராகிவிட்டனர். நாளை ஆயுதப் பூஜை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பூஜைக்குத் தேவையான பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு பூஜைப் பொருட்கள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன.
ஆயுத பூஜையை முன்னிட்டு பூ மார்க்கெட்டில் திங்கட்கிழமை காலை முதல் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒரு மூட்டை பொரி ரூ.600க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு மூட்டை பொரி ரூ.500க்கு விற்பனையானது.

சிம்லா ஆப்பிள் ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரைக்கும், கமலா ஆரஞ்சு பழம் ரூ.40 முதல் ரூ.50 வரைக்கும், சாத்துக்குடி ரூ.40 முதல் ரூ.50 வரைக்கும், கொய்யாப்பழம் ரூ.60க்கும், ஒரு சீப்பு வாழைப்பழம் ரூ.30 முதல் 40 வரைக்கும், கருப்பு திராட்சை ரூ.80க்கும், திராட்சை ரூ.60க்கும் விற்பனையாகிறது.
பூஜை பொருட்களின் அமோக விற்பனையால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
