பசுமை வழிச்சாலை எதிர்ப்பு: அதிகாரிகள் நட்ட கல்லை அகற்றி சேலம் பூலாவரி விவசாயிகள் போராட்டம்
அதிகாரிகள் நட்ட கல்லை அகற்றி சேலம் பூலாவரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Recommended Video

சேலம்: பசுமை வழிச்சாலை அமைக்க விளைநிலங்களில் அதிகாரிகள் நட்ட எல்லை கற்களை அகற்றி பூலாவரி கிராம விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்-சென்னை இடையே பசுமை வழி சாலை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அப்பகுதியில் உள்ள கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள நிலையில், திட்டத்துக்கு நிலம் வழங்கப்போவதில்லை என தீர்மானம் நிறைவேற்றி, கிராம மக்கள் பலவகை போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம்கூட, விவசாய நிலங்களை அழிக்கும் திட்டமான பசுமை வழிச்சாலை திட்டத்தினை கைவிடாவிட்டால் தமிழக முதல்வர் வீடு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்வோம் என பூலாவரி கிராம மக்கள் பகீர் அறிவிப்பினையும் வெளியிட்டிருந்தனர். ஆனாலும் தமிழக அரசு பசுமை வழிச்சாலை திட்டத்தினை அமைப்பதில் உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக விளைநிலங்களில் கற்களை நடும் பணிகளையும் தொடங்கியது. தங்கள் கண் முன்னாலேயே கற்கள் நடும் பணி நடைபெற்றதை கண்ட நில உரிமையாளர்களும், விவசாயிகளும் தங்கள் குடும்பத்தினருடன் தற்கொலை செய்யும் முயற்சியிலும்கூட இறங்கினர். ஒரு சிலர் அதிர்ச்சியில் மயங்கி விழுந்தனர்.
பூலாவரி கிராமத்தில் தொடர்ந்து 7 நாட்களாக கற்களை நடும் பணியானது இன்றுடன் முடிவடையும் நிலையிலும் உள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பூலாவரி கிராம விவசாயிகள், அதிகாரிகள் ஒரு வார காலமாக நட்ட எல்லை கற்களை அகற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications