சிறுநீரக கோளாறு.. உதவியின்றி தவிக்கும் இவருக்கு உதவுங்களேன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராஜன் முத்துப்பாண்டி... கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த இவருக்கு அழகான குடும்பம். மனைவி டயானா, இரண்டு குழந்தைகள் என அமைதியாய் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் நோய் பாதிப்பு புயலாய் தாக்கியது.

ராஜன் முத்துப்பாண்டியின் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து இப்போது சிகிச்சை பெற்று வருகிறார். ஒருநாள் விட்டு ஒருநாள் டயாலிசிஸ், சிறுநீராக மாற்று அறுவை சிகிச்சை என லட்சக்கணக்கில் பணம் தேவைப்படுகிறது.

ஆனால் தனியாக தவிக்கும் இவர்களுக்கு உதவ யாரும் முன் வரவில்லை.

திருநெல்வேலியை சொந்த ஊராக கொண்ட ராஜன் முத்துப்பாண்டி கிருஸ்துவ மதத்தைச் சேர்ந்த டயானாவை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்.

சென்னை பெரும்பாக்கத்தில் 2006ம் ஆண்டு செட்டில் ஆன இவர்களுக்கு இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் குழந்தையும். யுகேஜி படிக்கும் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.

கத்தார் ஏர்வேஸில் வேலை பார்த்து வந்த ராஜனுக்கு கடந்த ஆண்டு திடீரென்று உடல் முழுவதும் ஊத ஆரம்பிக்கவே அலர்ஜி பிரச்சினை என்று சரியாக கவனிக்காமல் விட்டு விட்டனர்.

சொந்த ஊரான திருநெல்வேலிக்கு சென்று சிகிச்சை அளித்தும் சரியாகவில்லை. கடந்த 3 மாதங்களாக குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இங்கு வந்த பின்னர்தான் சோதனை செய்து பார்த்ததில் 2 சிறுநீரகங்களும் செயலிழந்தது தெரியவந்தது.

தற்போது ஒருநாள் விட்டு ஒருநாள் டயாலிசிஸ் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு ராஜனின் உடல்நிலை ஒத்துழைக்கவில்லை. காரணம் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு உட்கொண்ட மாத்திரைகள் அவரது உடலை உருக்கிவிட்டது.

எனவே மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை செய்ய உள்ளனர். ராஜனின் அம்மாவின் சிறுநீரகம் தற்போது பொருத்தப்பட உள்ளது. வேலையும் இன்றி, உடலில் தெம்பும் இன்றி அறுவைச் சிகிச்சையை எதிர்நோக்கியுள்ளார்.

ராஜனுக்கு டயாலிசிஸ், மருந்து, ஊசி என ஒருமுறைக்கு 3000 ருபாய் வரை செலவாகிறது. அறுவை சிகிச்சைக்கு 8 லட்சம் வரை செலவாகும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனராம்.

ராஜனின் பெற்றோர்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர். நோய் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள கணவர், இரண்டு குழந்தைகளுடன் சிரமப்பட்டு வரும் இவர்களுக்கு கருணையுள்ளம் படைத்த நல்ல உள்ளங்கள் பணம் கொடுத்து உதவுங்களேன்.

Name: Rajan Muthupandi
Bank Name: Standard Chartered Bank
Branch: 19,Rajaji Salai,Chennai, 600 001
A/c No: 427-1-045848-3 (067030)
IFSC Code: SCBL0036078 Swift Code: SCBLINBBMDS
MICR Code: 600036005
Mobile No: 9962033885

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+