சிவன் சிலை திறப்புக்கு ஈஷா யோகா மையத்திற்கு மோடி வரக்கூடாது .. வலுக்கும் எதிர்ப்பு
கோவை ஈஷா யோகா மையத்தில் சிவன் சிலையை திறந்த வைப்பதற்காக வருகைத்தரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு வலுப்பெற்றுள்ளது.
சென்னை : மகா சிவராத்திரி தினமான பிப்ரவரி 24ம் தேதி , கோவை ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர சிவன் சிலையை திறந்து வைக்க மோடி வருகை தர உள்ளார். இதற்கு எதிர்ப்பு வலுக்கிறது.
ஏற்கனவே பல்வேறு விதிமீறல் புகார்களுக்கு உள்ளாகியுள்ள ஈஷா யோக மையம் நடத்தும் இந்த விழாவிற்கு வருகைத்தரும் மோடிக்கு எதிர்ப்பு வலுப்பெற்றுள்ளது.

ஈஷா யோக மையம் நடத்தும் நிகழ்ச்சி தொடர்பாக சென்னை சேப்பக்கத்தில் பூவலகின் நண்பர்கள் அமைப்பு சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஓய்வு பெற்ற நீதியரசர் ஹரிபரந்தாமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்னன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது ஈஷா யோகா மையத்தில் சிவன் சிலையை திறந்த வைக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ளக்கூடாது என்று மூவரும் தெரிவித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வரும் கலந்து கொள்ளக்கூடாது என்றும் அவர்கள் கேட்டுக்கொ ண்டனர்.
முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன்
ஈஷா யோக மையம் சட்டத்துக்கு புறம்பாக 13 லட்சம் சதுர அடி நிலத்தை ஆக்கிரமித்து கட்டடங்களை நிறுவியுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளையும் மதிக்காமல் கட்டடங்களை நிறுவிவருகிறது. இதனால் பிரதமர் மோடி வருகிற 24ம் தேதி நடைபெறவுள்ள நிகழ்ச்சிக்கு வரக்கூடாது என்று கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - நல்லகண்ணு
பிரதமர் வருவதால் நாங்கள் இதை எதிர்க்கவில்லை. ஈஷா யோகா மையம் தொடர்ந்து விதிமுறைகளை மீறி கட்டடங்களை எழுப்பிவருகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்புக்கிறது. அதனால் தான் நாங்கள் இந்த நிகழ்ச்சியை எதிர்க்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications