போரூர் கட்டட உரிமையாளர் மதுரை மனோகரனுக்கு அரசியல் தொடர்பு?
சென்னை: சென்னை போரூரில் நடந்த 11 மாடிக் கட்டட விபத்தில் கைதாகியுள்ள கட்டட உரிமையாளர் மனோகரன், அவரது மகன் முத்துக் காமாட்சி உள்ளிட்ட 6 பேரும் 15 நாள் சிறைக் காவலில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரையைச் சேர்ந்தவரான மனோகரன் தனது மகன் முத்துக் காமாட்சியுடன் இணைந்து பிரைம் சிருஷ்டி பில்டர்ஸ் மூலம், இந்த போரூர் கட்டடத்தைக் கட்டி வந்தார்.
மொத்தம் 2 பிரிவுகளாக தலா 11 மாடிகளைக் கொண்டதாக இந்த அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டப்பட்டு வந்தது. முதல் பிரிவு முடிந்த நிலையில் 2வது பிரிவும் இறுதிக் கட்டத்தை அடைந்தபோதுதான் கட்டடம் விபத்துக்குள்ளாகி விட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மனோகரன், முத்துக் காமாட்சி, ஆர்க்கிடெக்ட் விஜய் பர்கோத்ரா, என்ஜீனியர்கள் துரைசிங்கம், சங்கர், கட்டட வரைபடத்தை தயாரித்த வெங்கட சுப்பிரமணியன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களை ஸ்ரீபெரும்புதூர் மாஜிஸ்திரேட் சந்தோஷ் வீட்டில் போலீஸார் ஆஜர்படுத்தினர். பின்னர் 6 பேரையும் 15 நாள் சிறைக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்களைப் போலீஸார் வேலூர் சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையே, மனோகரனுக்கும், முக்கிய ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவருக்கும் இடையே தொழில் ரீதியாக தொடர்புகள் இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பைக் கூட்டியுள்ளது.
-
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications