பல வருட தபால்களை பண்டலாக கட்டி வீட்டில் வைத்திருந்த போஸ்ட்மேன் சஸ்பெண்ட்!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் கடிதங்களை உரியவர்களிடம் சேர்க்காமல் வீட்டில் மூட்டையாக வைத்திருந்த தபால்காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் தபால் நிலையத்தில் இருந்து அருகில் உள்ள கீரமங்கலம் மேற்கு, வடக்கு, கொடிக்கரம்பை மற்றும் செரியலூர் பகுதிகளுக்கு ஒரு தபால் காரர் மட்டும் தபால்கள் கொடுத்து வந்தார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக பொதுமக்களுக்கு வரும் தபால்கள் மற்றும் இளைஞர்களுக்கு வந்த நேர்காணல் கடிதம், வங்கி கடிதங்கள், வேலை உத்தரவுகள் போன்ற எந்த தபால்களும் உரிய நபர்களுக்கு கிடைக்காமல் தவித்து வந்தனர்.
பலமுறை பலர் சம்மந்தப்பட்ட தபால் நிலையத்தில் புகார் கொடுத்தும் முறைப்படி வந்து கிடைக்கப்பெறவில்லை. இந்த நிலையில் சம்மந்தப்பட்ட பகுதிக்கு தபால் கொடுக்கச் செல்லும் தபால்காரர் கீரமங்கலம் அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டில் அனைத்து தபால்களையும் மூட்டையாக கட்டி வைத்திருப்பது பாதிக்கப்பட்ட நபர்களுக்கு தெரியவந்துள்ளது.
தபால் கிடைக்காமல் வேலைகளை இழந்த இளைஞர்களின் புகாரையடுத்து ஆலங்குடியில் இருந்து வந்த அஞ்சலக அதிகாரிகள் தபால்கார் வீட்டில் சோதனை செய்த போது வீட்டுக்குள் சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த தபால்கள் முதல் சமீபத்தில் வந்த தபால்கள் வரை 3 மூட்டைகளில் கட்டி வைக்கப்பட்டிருந்ததை மீட்டனர். அதன் பிறகு அந்த தபால்களை தபால் நிலையத்திற்கு அள்ளிச் சென்று விசாரணை செய்தனர்.
இந்த சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டு பாதிக்கப்பட்ட ஏராளமான இளைஞர்கள் தபால் நிலையத்தில் குவிந்து புகார்களை சொன்னார்கள். தொடர்ந்து நடந்த விசாரணையின் அடிப்படையில் தபால்காரர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications