சன் குழும வழக்கு முடியும் வரை எப்.எம். ஏலத்தை தள்ளிவைக்க கோரி ரேடியோ மிர்ச்சி மனு
சென்னை: சன் குழும வழக்கு முடியும் வரை எப்.எம். ரேடியோக்களுக்கான ஏலத்தை ஒத்திவைக்கக் கோரி ரேடியோ மிர்ச்சி எப்.எம். நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
எப்.எம் ரேடியோக்களுக்கான ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்துக்கு மத்திய அரசு அனுமதி மறுத்திருந்தது. இதற்கு எதிரான சன் குழுமம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

மேலும் அந்த உத்தரவில் ஏலத்தின் முடிவை வழக்கின் அடுத்த விசாரணையின்போது சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், ஏலத்தில் சன் குழுமம் பங்கேற்றாலும், இந்த இடைக்கால உத்தரவு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சன் குழுமம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்த வழக்கின் இறுதி முடிவுக்குப் பிறகு ஏலத்தை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரி ரேடியோ மிர்ச்சி நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தல் நேற்று மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில் சன் குழுமம் இடைக்கால உத்தரவின் அடிப்படையில் ஏலத்தில் பங்கேற்று, ஒரு வேளை ஏலத்தில் வெற்றி பெறுகின்றனர் என்றாலும், வழக்கின் இறுதி முடிவில் அவர்களை நீதிமன்றம் நிராகரித்தால், சன் குழுமத்தினர் ஏலத்தை எடுக்க வேண்டியதில்லை. அதனால் பிற நிறுவனங்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும்.
இது தவிர சன் குழுமத்தினர் ஏலத்தில் பங்கேற்று அதிக ஏலத்தொகை நிர்ணயிக்கப்பட்ட பிறகு, அவர்களை நீதிமன்றம் நிராகரித்தால் முன்னர் நடைபெற்ற ஏலத்தை ரத்து செய்து, பின்னர் நடைபெறும் புதிய ஏலத்தில் ஆரம்ப விலையும் அதிகரிக்கும். இதன் காரணமாகவும் எங்கள் நிறுவனத்துக்கு பாதிப்பு ஏற்படும்.
மேலும் தற்போது அனைத்து பண்பலை வானொலி நிலையங்களுக்கான உரிமமும் வரும் செப்டம்பரில்தான் முடிவடைகிறது. எனவே சன் குழுமம் சார்பில் தொடரப்பட்ட வழக்கின் இறுதிமுடிவு வரும் வரை ஏலத்தை தள்ளி வைக்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதி சத்யநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, நான் ஏற்கெனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவில் ஏலத்தில் அதிக தொகை நிர்ணயிக்கப்பட்டால் அது நாட்டின் நலனுக்குத்தான் நல்லது எனக் குறிப்பிட்டிருந்தேன். எனவே, ஏலத்தை தள்ளிவைக்க அரசுக்கு உத்தரவிடமுடியாது என்றார்.
இது குறித்து சன் குழுமம் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications