முதல்வர் உறுதியளித்த பிறகும் தொடரும் மின்வெட்டு: அதிகாரிகள் ஆலோசனை
சென்னை: மின்தடை இருக்காது என்று அரசு அறிவித்த நிலையிலும், மின்வெட்டை தடுக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள் அதிகாரிகள்.
தமிழகத்தில் அதிகப்படியான அளவு மின்வெட்டு நிலவுகிறது. மக்கள் செய்வதறியாது திகைக்கிறார்கள். இந்நிலையில், அனல் மின் நிலையங்கள் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பால், "ஜூன் 1ம்தேதி முதல் தமிழகத்தில் மின்வெட்டே இருக்காது" என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.

ஆனால் நடைமுறையில் நிலைமை இன்னும் மோசமாகத்தான் உள்ளது. சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில்கூட, இரவு 10:00 மணிக்கு மேல், மின்தடை செய்வது தொடர் கதையாக உள்ளது. இந்நிலையில், மீண்டும் தலை தூக்கியுள்ள மின்தடை பிரச்னைக்கு தீர்வு காண, தலைமை செயலகத்தில், மின் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தலைமையில், ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தலைமை செயலாளர், தமிழ்நாடு அரசின் ஆலோசகர், எரிசக்தி துறை செயலாளர், மின் வாரிய தலைவர் உள்ளிட்ட அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
"அனல் மற்றும் காற்றாலைகளில், மின் உற்பத்தி நன்கு உள்ளபோதிலும், மின் வினியோகம் செய்வதில் சிக்கல் காணப்படுகிறது. இந்த பிரச்னையை சமாளிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது" என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
-
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
ஹார்டு டிஸ்க் மாயமா? மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி.. விளாசிய செந்தில் பாலாஜி -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications