சென்னையின் பல்வேறு இடங்களில் திடீர் மின்வெட்டு.. பொது மக்கள் கடும் அவதி !
சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
சென்னை: சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டுள்ளதால் பொது மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வட சென்னை பகுதிகளில் சுமார் 2 மணி நேரமாக மின்சாரம் இல்லாததால் சர்மாநகரில் உள்ள மின்சார வாரியத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையின் முக்கிய இடங்களில் திடீரென்று மின்வெட்டு ஏற்பட்டது. வியாசர்பாடி, ராயபுரம், தண்டையார்பேட்டை, காசிமேடு, வண்ணாரப்பேட்டை, ஐ.ஓ.சி. உள்ளிட்ட பகுதிகளில் இரவு 9 மணி முதல் மின் தடை ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் மடிப்பாக்கம் பகுதியில் இரவு 10 மணி முதல் மின் தடை ஏற்பட்டுள்ளது. மேலும், எழும்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, பெரம்பூர், சென்ட்ரல் உள்ளிட்ட பல பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
வட சென்னை பகுதிகளில் சுமார் 2 மணி நேரமாக மின்சாரம் இல்லாததால் சர்மா நகரில் உள்ள மின்சார வாரியத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மின்சார வாரிய ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த போலீசார் பாதுகாப்பு பணிக்காக சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மின் வெட்டுக்கான காரணம் குறித்து இதுவரை எந்தத் தகவலும் மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்படவில்லை
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Badam Pisin Jelly: கோடை வெயிலுக்கு குளிர்ச்சியான 'பாதாம் பிசின் பழக் கலவை ஜெல்லி! தயாரிப்பது எப்படி? -
வெயில் கொடுமை! உடல் சூட்டை தணிக்கும் 5 அற்புத உணவுகள்! இளநீர் குடிக்கும் போது அந்த தவறை செய்யாதீங்க! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications