கூடங்குளம் 2வது அணு உலையில் மின் உற்பத்தி திடீர் நிறுத்தம்
பராமரிப்பு பணிக்காக கூடங்குளம் இரண்டாவது அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை: நெல்லை மாவட்டம் கூடங்குளம் இரண்டாவது அணு உலை 730 மெகாவாட்டை எட்டிய நிலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில ரஷ்ய நாட்டு உதவியுடன் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் அணுஉலை கட்டுமான பணிகள் முடிவடைந்து கடந்த 2013 ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் மின்உற்பத்தி தொடங்கப்பட்டது.

இந்நிலையில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக கடந்தாண்டு ஜுன் மாதம் முதல் அணுஉலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு மீண்டும் கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் மின் உற்பத்தி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வரும் ஜனவரி மாதம் முதல் அணுஉலையில் எரிக்கப்பட்ட யுரேனியம் எரிக்கோல்கள் அகற்றப்பட்டு புதிய யுரேனியம் எரிப்பொருட்கள் நிரப்பப்பட உள்ளது.
இரண்டாவது அணுஉலையில் 500 மெகாவாட்டிலிருந்து 750 மெகாவாட்டாக மின்உற்பத்தி அதிகரிக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த நிலையில் இரண்டாவது அணு உலை 730 மெகாவாட் மின் உற்பத்தியை எட்டிய நிலையில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. ஆய்வு பணிக்காக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், ஒருவார ஆய்வுப் பணிக்கு பின் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று கூடங்குளம் வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications