சிவகங்கையிலிருந்து அதிமுக வேட்பாளராக வாக்கு கேட்டு வருகிறார் பி.ஆர்.செந்தில்நாதன்
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் சிவகங்கை லோக்சபா தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக பிஆர்.செந்தில்நாதன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
தேவகோட்டை அருகே நாகாடி கிராமத்தைச் சேர்ந்த செந்தில்நாதனின் அப்பா பெயர் பெரியய்யா சேர்வை.

தற்போது 54 வயதாகும் செந்தில்நாதன் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர். வழக்கறிஞரான செந்தில்நாதனின் மனைவி பெயர் குந்தவை நாச்சியார். இவர்களுக்கு மன்னன் மற்றும் குமணன் என இரு மகன்கள் உள்ளனர்.
2013ல் சிவகங்கை மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்ட செந்தில்நாதன், தேவக்கோட்டை ஒன்றியக் குழுத்தலைவராக இருந்துள்ளார். கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் தமிழ்நாடு மாநில பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத் தலைவர் பதவி வகித்து வருகிறார் செந்தில்நாதன்.












Click it and Unblock the Notifications