சீட்டாட்டத்தில் நடந்த சண்டை... நண்பன் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை - வீடியோ

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூர் மாவட்டம் சைதாப்பேட்டை மலைப் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கட்டடத் தொழிலாளியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம், காகிதப்பட்டறையை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து சைதாப்பேட்டை மலையில் சீட்டாடிக்கொண்டிருந்தார்.

 Prabakaran killed in Vellore saidapet while playing cards

அப்போது சீட்டு விளையாடிய நண்பர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள் பிரபாகரன் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு கொலை செய்துள்ளனர். மேலும், கத்தியால் குத்தியும் உள்ளனர். இதனால் அதே இடத்தில் பிரபாகரன் மரணமடைந்துள்ளார். ஆனால் கொலை செய்தவர்கள் தப்பித்துவிட்டனர்.

பிரபாகரனின் உடலைப் பார்த்த பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். உடனே மாவட்ட கண்காணிப்பாளர் பகலவன் நேரில் சென்று விசாரணை செய்தார். மேலும், வேலூர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+