பிரபாகரனுக்கு சீமான் யாரென்றே தெரியாது.. ஆமைக்கறி சாப்பிட்டது உண்மை.. ஒளிப்பதிவாளர் சந்தோஷ் பேட்டி!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் எடுத்து கொண்ட புகைப்படம் போலியானது, அதனை எடிட் செய்து கொடுத்ததே நான்தான் என்று இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு சீமான் தரப்பில், அந்த புகைப்படம் எடிட் என்பதற்கான ஆதாரத்தை காட்டுங்கள் என்று பதில் அளித்தார்.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் புயலை கிளப்பி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் பிரபாகரனின் அண்ணன் மகனான கார்த்திக் மனோகரன், சீமான் பிரபாகரனை சந்தித்தது உண்மை தான். ஆனால் அந்த சந்திப்பு வெறும் 8 முதல் 10 நிமிடங்கள் வரை மட்டுமே நடந்த ஒன்று. என்னைவிட ஈழத்திற்கு ஆவணப்படம் எடுக்க வந்த ஒளிப்பதிவாளர் சந்தோஷ் வாய் திறந்தால் இன்னும் அதிக உண்மைகள் வெளி வரும் என்று கூறி இருந்தார். ஆனால் பிரபாகரனின் அண்ணன் மகனின் கருத்து குறித்த கேட்ட போது, பெண் பத்திரிகையாளரை சீமான் திட்டி சென்றார்.

இந்த நிலையில் ஈழத்திற்கு ஆவணப்படம் எடுக்க சென்ற சந்தோஷ் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியில், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் கலை மீது அதிக ஆர்வம் கொண்டவர். அங்கிருந்தவர்களுக்கு அனைத்து வகையான கலையும் கற்றுத் தரப்பட்டது. அப்படிதான் சினிமாவும் கற்றுக் கொடுக்கப்பட்டது.
வாழ்த்துகள் படம் வெளியான நேரத்தில் தான் சீமான் ஈழத்திற்கு அழைக்கப்பட்டார். அதற்கு முக்கியமான காரணம் வன்னி அரசு. அதேபோல் ஈழத்தில் எடுக்கப்பட்ட ஆவணப் படத்திற்கும் சீமானுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அந்த சமயத்தில் சீமானின் பேச்சுகள் கவனிக்கப்பட்டது. சேரலாதன் மூலமாக தான் பிரபாகரனுக்கு சீமான் அறிமுகமானார். அதுவரை சீமானை யாரென்று கூட பிரபாகரனுக்கு தெரியாது.
சீமான் 2008ஆம் ஆண்டு பிப்.9ல் ஈழத்திற்கு வந்தார். அங்கிருந்து பிப்.23ஆம் தேதி மீண்டும் திரும்பிவிட்டார். அவர் பிரபாகரனை பிப்.13ஆம் தேதி சந்தித்தார். அது வெறும் 9 நிமிடங்கள் வரையிலான சந்திப்பு தான். சீமான் ஆயுதங்களுடன் இருப்பது போல் எடுக்கப்பட்ட புகைப்படத்தை என் கேமராவில் தான் படமெடுத்தேன். அந்த ஆதாரம் என்னிடம் உள்ளது.
ஆனால் தற்போது சீமான் பிரபாகரனுடன் எடுத்து கொண்டதாக சொல்லப்படும் புகைப்படம் போலியானது. ஏனென்றால் புகைப்படங்கள், வீடியோ எல்லாம் என்னிடம் மட்டுமே உள்ளது. சேரலாதனை நச்சரித்து தான் பிரபாகரனை சீமான் சந்தித்தார். விடுதலை புலிகளை சீமான் ஹோட்டல் சமையல்காரர்களை போல் மாற்றிவிட்டார். ஈழத் தமிழர்களின் வீடுகளில் விருந்தோம்பல் மிகச்சிறப்பாக இருக்கும். அவர்களை போல் விருந்தோம்பலில் சிறந்தவர்களே கிடையாது.
உச்சக்கட்ட போரின் போது ஆமைக்கறி உள்ளிட்ட உணவுகளும் பரிமாறப்பட்டன. மற்றவர்களுக்கு நடந்த விஷயங்கள் எல்லாம் தனக்கு நடந்ததாக சீமான் கூறி வருகிறார். உதாரணமாக பிரபாகரனை சீமான் சந்திக்கும் போது, அங்கு தமிழேந்தி இருந்ததாகவும், சீமான் தான் தமிழை ஏந்தி பிடித்திருப்பதாகவும் கூறுகிறார். ஆனால் இந்த சம்பவம் தராசு சந்திரசேகரனுக்கு நடந்த ஒன்று.
நாங்கள் எல்லாம் ஒன்றாக இருந்த போது பேசிய விஷயங்களை, தனக்கான ஒன்றாக சீமான் மாற்றி சொல்லி வருகிறார். நான் கடல் உணவுகளை சாப்பிட மாட்டேன் என்று அங்கிருந்தவர்களுக்கு தெரிந்துவிட்டது. அப்போது சேரலாதன் என்னிடம் வந்து, பிரபாகரனுக்கு சமையலராக உள்ளவர் சமைத்த ஆடு பிரட்டல்.. இதை சாப்பிடுங்கள் என்று கொடுத்தார். ஆனால், அது ஆமைக் கறி என்று பின் தான் கூறினார்கள்.
இதனால் ஆமைக் கறி பரிமாறப்பட்டது உண்மை தான். ஆனால் சீமானுக்கு ஆமைக் கறி கிடைக்கவில்லை. ஆமைக் கறி கொடுத்த கதைகளை சீமான் சொந்தமாக கூறி வருகிறார். சீமானுக்கு உடும்பு கறி பரிமாறப்பட்டது. நான் ஈழத்தில் மட்டும் 7 மாதங்கள் தங்கி இருந்தேன். நாம் சாப்பிடுவதை பின்னால் இருந்து குறிப்பெடுக்கும் கட்டமைப்பு விடுதலை புலிகளிடம் இல்லை.
தற்போது சீமான் சொல்லி வந்த கதைகளை அவரே நம்ப தொடங்கியது தான் பிரச்சனை. அதேபோல் சேரலாதன் ஒருமுறை சீமானுடன் ஸ்கைப்பில் பேச முயற்சி செய்தார். இதனை நான் சென்று சீமானிடம் கூறிய போது, அங்கே விஜயலட்சுமி இருந்தார். விஜயலட்சுமி சென்ற பின் பேசுங்கள் என்று கூறியதை அவர் ஏற்கவில்லை. சேரலாதன் போரில் இருந்த போது, சீமான் விஜயலட்சுமியுடன் இருந்தார். இதனை சேரலாதனிடம் கூறிய போது, இனி அவனுடன் பேச மாட்டேன் என்று கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications