தென்காசி அருகே கர்ப்பிணி பெண் மரணத்தில் சந்தேகம்... கொலையா என கணவரிடம் விசாரணை
தென்காசி: தென்காசி அருகே கர்ப்பிணிப் பெண் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லைமாவட்டம் குற்றாலம் ஐந்தருவி சாலையில் தனியார் விடுதி ஒன்று உள்ளது.இந்த விடுதியில் குற்றாலத்தை சார்ந்த ஆறுமுகம் என்பவர் குடும்பத்தோடு தங்கி காவலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் சொர்ணம் இவரை தென்காசி அருகேயுள்ள மத்தாளம் பாறை பகுதியை சார்ந்த நாகராஜ் என்ற தொழிலாளிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். தற்போது சொர்ணம் 3மாத கர்ப்பிணியாக உள்ளார்.
இந்நிலையில் இன்றுகாலை சொர்ணம் வீட்டு வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது கணவர் அங்கு வந்ததாகவும், அவர்களுக்குள் சண்டை நடந்ததாகவும் கூறப்படுகிறது.
பின்னர் சிறிது நேரத்தில் சொர்ணம் வீட்டில் தீ பிடித்து எரிந்துள்ளது. சொர்ணத்தின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தார் கதவை தட்டியுள்ளனர். அப்போது கதவு தானாக திறந்துள்ளது. அங்கு எரிந்த நிலையில் பிணமாக சொர்ணம் கிடந்துள்ளார்.
இது குறித்து குற்றாலம் போலீஸாருக்கு தகவல் கிடைக்கவே தென்காசி காவல்துறை துணைக்கு கண்காணிப்பாளர் சஷாங் சாய் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
சொர்ணம் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் அவரது கணவர் நாகராஜைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications