அப்பாவி' அழகிரியை நீக்கி ஓரவஞ்சனை...: "அடேங்கப்பா அந்தர் பல்டி" அடித்த பிரேமலதா விஜயகாந்த்!!

Subscribe to Oneindia Tamil

மதுரை : ஸ்பெக்ட்ரம் ஊழல் புரிந்த ராசாவுக்கு சீட் வழங்கிய கருணாநிதி, ஒரு குற்றமும் செய்யாத அழகிரியை நீக்கியது ஓரவஞ்சனை என குற்றம் சாட்டியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த்.

தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில் மதுரை லோக்சபா தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் சிவமுத்துக்குமாரை ஆதரித்து நேற்று மதுரை கீழவாசல் அரசமரத்துப் பிள்ளையார் கோவில் அருகே வேனில் நின்றபடி பிரசாரம் செய்தார் பிரேமலதா.

அப்போது அவர் பேசியதாவது :-

சவுராஷ்டிரா கோரிக்கை...

சவுராஷ்டிரா கோரிக்கை...

கீழவாசல், காமராஜர் சாலை பகுதியில் சவுராஷ்டிரா சமுதாய மக்கள் அதிகம் வசிக் கிறீர்கள். உங்களின் நீண்டநாள் கோரிக்கையான மிகவும் பிற்ப டுத்தப்பட்ட வகுப்பில் சவுராஷ்டிரா வகுப்பினரை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை யை நாங்கள் நிறைவேற்று வோம்.

குப்பை நகரமான மதுரை....

குப்பை நகரமான மதுரை....

மதுரையில் 40 ஆண்டுகளு க்கு முன் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட் டது. அதன்பின் விரிவுபடுத்தப் படவில்லை. இதனால் மதுரை முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்பட்டு உள்ளது. தமிழகத்தின் 2-வது பெரிய நகரம் என்ற பெருமையை பெற்ற மதுரை யில் எங்கு பார்த்தாலும் சாக் கடைகளும், குப்பைகளும் நிரம்பி காணப்படுகிறது. மின் வெட்டு, குடிநீர் பிரச்சி னையால் தவிக்கிறது மதுரை. வைகை குடிநீர் திட்டம், மண லூர் குடிநீர் திட்டம் செயல் படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. பெரிய ஆஸ்பத்திரியில் எந்த வசதியும் இல்லை.

கஜானாவைச் சுரண்டிய கட்சிகள்...

கஜானாவைச் சுரண்டிய கட்சிகள்...

இதற்கு காரணம் தி.மு.க.-அ.தி.மு.க. தான். அரசு கஜானாவை சுரண்டுவது மட்டும் தான் அவர்களுக்கு தெரியும். ஜெயலலிதா அ.தி.மு.க. கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒரு சாதனையையும் செய்யவில் லை. அதனால் தான் அ.தி.மு. க.வினர் பணம் கொடுத்தாவது ஓட்டுகளை பெற்றுவிட வேண் டும் என்ற முனைப்போடு செயல்பட்டுக் கொண்டி ருக்கி ன்றனர்.

வேதனை ஆட்சி...

வேதனை ஆட்சி...

தற்போது தமிழகத்தில் நடைபெறுவது சாதனை ஆட்சி அல்ல. வேதனை ஆட்சி. நிர்வாகத்திறமை அற்ற ஆட்சி. காசுக்காக ஓட்டுப் போடாதீர். உங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று ஒவ்வொரு வீட்டின் வாச லிலும் எழுதி வையுங்கள்.

பாவ விமோசனம்....

பாவ விமோசனம்....

தி.மு.க.-அ.தி.மு.க.வை இந்த தேர்தலில் விடை கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வையுங்கள். அப்போது தான் உங்களுக்கு பாவவிமோசனம் கிடைக்கும்.

வாய்தா ராணி பட்டம் தான்...

வாய்தா ராணி பட்டம் தான்...

3 முறையாக ஆட்சி செய்யும் நரேந்திரமோடி, அவரது செயல்பாட்டிற்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். ஆனால் ஜெயலலிதா ஒரு விருதாவது பெற்றாரா. மாறாக வாய்தா ராணி, அறிக்கை அரசி என 2 பட்டங்களை பெற்றுள்ளார்.

 தேர்தல் தோல்வி காய்ச்சல்...

தேர்தல் தோல்வி காய்ச்சல்...

நேற்று ஒரு கூட்டத்தில் பேசிய ஜெயலலிதா, காய்ச்சல் இருந்த போதிலும் பிரசாரம் செய்து வருகிறேன் என்றார். அவருக்கு தேர்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயம் காரணமாகவே காய்ச்சல் வந்துள்ளது.

அப்பாவி அழகிரி...

அப்பாவி அழகிரி...

2ஜி ஸ்பெக்டரம் ஊழலில் ஊழல் செய்தவர் ராஜா. அவருக்கு இந்த தேர்தலில் சீட் கொடுத்து, தனது பக்கத் திலேயே வைத்துள்ளார் கரு ணாநிதி. ஸ்பெக்டரம் ஊழ லில் 6 மாதம் சிறைவாசம் அனுபவித்த கனிமொழி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. ஆனால் ஒரு குற்றமு ம் செய்யாத அழகிரியை தி.மு.க. அடிப்படை உறுப்பி னரில் இருந்து நீக்கி உத்தர விட்டார். அதற்கான காரண த்தை கருணாநிதி வெளியிட வேண்டும்.

கருணாநிதியின் ஓரவஞ்சனை...

கருணாநிதியின் ஓரவஞ்சனை...

இதற்கு அழகிரி கூறியதுபோல, அவரை மிரட்டியே சிலர் இந்த செயலை செய்ய வைத்துள்ளனர். ஒரு நல்ல தந்தையாக இருப்பவர், தன் குழந்தைகள் அனைவரையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும். அதைவிட்டு ஓரவஞ்சனை செய்கிறார்

நதிகளை இணைப்பார் மோடி...

நதிகளை இணைப்பார் மோடி...

கடந்த பா.ஜனதா ஆட்சியி ன்போது தங்கநாற்கர சாலையை வாஜ்பாய் செயல்படு த்தினார். தற்போது தேசிய நதிகளை மோடி இணைத்து சாதனை படைப்பார். எனவே தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள். நாங்கள் வெற்றி பெற்று, தமிழக பிரச்சி னைகள் அனைத்தையும் போ க்குவோம்' என இவ்வாறு அவர் தனது பிரச்சாரத்தில் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+