அண்ணியாக, அன்னையாக இருந்த பிரேமலதா சித்தியாக மாறிவிட்டார்: வேலூர் விஸ்வநாதன்
சென்னை: அண்ணியாக, அன்னையாக இருந்த பிரேமலதா சித்தியாக மாறியதால் மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை துவங்கியுள்ளதாக தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட வேலூர் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தேமுதிகவில் இருந்து நீக்கப்பட்ட சந்திரகுமார் எம்.எல்.ஏ. தலைமையில் போட்டி பொதுக்குழு கூட்டம் சென்னை தி. நகரில் உள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது. கூட்டத்தில் சேலம், ஈரோடு, வேலூர் உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த தேமுதிகவினர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தை அடுத்து மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சி துவங்கப்பட்டுள்ளதாகவும், அதிமுக ஆட்சியை அகற்ற இந்த கட்சி பாடுபடும் என்றும் சந்திரகுமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட வேலூர் மாவட்ட செயலாளர் விஸ்வநாதன் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அண்ணியாக, அன்னையாக இருந்த பிரேமலதா சித்தியாக மாறிவிட்டார். அதனால் தான் மக்கள் தேமுதிக கட்சி துவங்கப்பட்டுள்ளது. தேமுதிக பிரேமலதாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. அவர் எங்கள் தலைகளை அடமானம் வைத்து பெரிய தொகையை வாங்கிவிட்டார்.
அவர் எங்களின் கனவுக் கோட்டையை தகர்த்துவிட்டார். நாங்கள் கட்சிக்கு துரோகம் செய்தோமா இல்லையே. கூட்டணி குறித்து தானே கேட்டோம். இத்தனை நாட்களாக மனக்கஷ்டத்தோடு இருந்தோம். பல நாட்கள் தூக்கமின்றி தவித்தோம் என்றார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications