234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க தயாரா? ஜெ.வுக்கு பிரேமலதா விஜயகாந்த் சவால்
காஞ்சிபுரம்: கூட்டணி பற்றி விஜயகாந்த் அறிவிப்பதற்கு முன்பு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்க ஜெயலலிதா தயார என தேமுதிக மகளிரணி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் சவால் விடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வேடல் என்ற பகுதியில் தேமுதிகவின் தமிழக அரசியலின் திருப்புமுனை மாநாடு இன்று மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது. இதையொட்டி மாநாட்டு பணிகளை பிரேமலதா விஜயகாந்த் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், அதிமுக அரசு தமிழகத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும். இங்கு அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது. ஊழலை ஒழிப்பது தேமுதிகவின் லட்சியமாகும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெறும் தேமுதிகவின் மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும். தமிழகத்தில் நல்லாட்சியை ஏற்படுத்தும் முயற்சியாக இந்த மாநாடு நடைபெறுகிறது.
தமிழக அரசு முதியோருக்கு இலவசப் பேருந்து பயண அட்டையை வழங்குவதாக அறிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக முதியோர் மீது இல்லாத அக்கறை தற்போது வந்துள்ளது நகைப்புக்குரியதாகும். தமிழக அரசு 110 விதியின் கீழ் அறிவிக்கும் திட்டங்கள் வெற்று அறிவிப்புகளாகவே உள்ளன. அவற்றில் பல செயல்படுத்தப்படவில்லை. தற்போதைய அரசு தமிழக மக்களை 5 லட்சம் கோடி ரூபாய்க்கு கடனாளியாக ஆக்கியுள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு தேமுதிகதான் காரணம். இம்முறை அதிமுகவின் வெற்றிக்கு தேமுதிக முற்றுப்புள்ளி வைக்கும். நல்ல முடிவே இந்த மாநாட்டில் விஜயகாந்த் அறிவிப்பார். கூட்டணி பற்றி விஜயகாந்த் அறிவிப்பதற்கு முன்பு 2011ம் ஆண்டு தேர்தலில் வேட்பாளர்களை முன் கூட்டியே அறிவித்தது போல் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் அறிவிக்க ஜெயலலிதாவுக்கு தைரியம் இருக்கிறதா என சவால் விடுவதாகவும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications