கடம் வாங்க மானாமதுரை வரும் இளையராஜா, ரகுமான், டிரம்ஸ் சிவமணி!
மானாமதுரை: இந்தியாவிலேயே சிறந்த கடம் தயாரிப்பாளர் என மானாமதுரையைச் சேர்ந்த மீனாட்சியம்மாளுக்கு இந்திய அரசு அறிவித்து டெல்லியில் கடந்த 11ம் தேதி நடைபெற்ற விழாவில் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கையால் விருது பெற்றுள்ளார்.
இந்திய தேசிய சங்கீத அகாடமியின் தலைவர் லீலா சாம்சன் மானாமதுரை கடம் தேசிய அளவில் சிறந்த கடமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார்.
கர்நாடக இசைக்கலைஞர்கள் மானாமதுரை கடத்தை தான் தேர்வு செய்து கச்சேரிகளில் பயன்படுத்துவார்கள்.

இளையராஜா, ரகுமான்
இளையராஜா, ரகுமான், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்டோர் மானாமதுரை வந்து கடம் வாங்கி செல்வது வழக்கம்.

மானாமதுரை கடம்
மானாமதுரை கடத்திற்கு சிறந்த கடம் என விருது வழங்க வேண்டும் என பிரபல கடம் வித்வான் விநாயக்ராம், சுகன்யா உள்ளிட்டோர் குரல் கொடுத்து வந்தனர். இதனையடுத்து டெல்லி தேசிய சங்கீத அகாடமி சிறந்த கடம் தயாரிப்பாளர் என மானாமதுரையைச் சேர்ந்த மீனாட்சிஅம்மாளை தேர்வு செய்யப்பட்டார்.

மீனாட்சி அம்மாளுக்கு விருது
இதற்கான விழா இம்மாதம் 11ம் தேதி டெல்லியில் குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி தலைமையில் நடந்தது. அவ்விழாவில் ஜனாதிபதி விருதை வழங்கி கவுரவித்தார். ஓரு லட்ச ரூபாய் பணமுடிப்பும், தாமிர பட்டயமும் சான்றிதழ் ஆகியவற்றை மீனாட்சி அம்மாளுக்கு வழங்கினார்.

40 ஆண்டுகால தொழில்
கடந்த 40ஆண்டுகளாக கடம் தயாரித்து வரும் மீனாட்சி கூறுகையில், 15 வயதில் இருந்து கடம் தயாரிக்கிறேன், எனது மாமா, கணவர் வரிசையில் நாங்கள் கடம் தயாரிக்கிறோம்.

ஜனாதிபதியிடம் பாராட்டு
கர்நாடக இசையில் பங்கு பெறும் பெரும்பாலான கடங்கள் இங்கு தயாரானவைதான். இந்த விருதின் மூலம் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளேன். ஜனாதிபதி மிகவும் பாராட்டினார் என்றார்.

தேசிய சங்கீத அகாடமி
விழாவில் கலந்து கொள்ள மீனாட்சியம்மாள் மற்றும் ஒருவர் உடன் வரும் நபர் ஆகியோரின் அனைத்து செலவுகளையும் தேசிய சங்கீத் அகாடமியே செய்தது குறிப்பிடத்தக்கது.

மண்பாண்ட தொழிலாளர்கள் உற்சாகம்
சிறந்த கடம் தயாரிப்பாளர் விருது பெற்றிருப்பது மண் பாண்ட தொழிலாளர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications