கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க நாளை சென்னை வருகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!
சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகிறார்.
சென்னை: காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை சென்னை வருகிறார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரை சிறப்பு மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் கண்காணித்து, தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

கோஷம்
கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்வதற்காக தி.மு.க. தொண்டர்கள் மருத்துவமனைக்கு வெளியே திரண்டு நின்று பிரார்த்தனை செய்வதோடு, பூரண குணமடையவேண்டும் என்று கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.

சக்கர நாற்காலியில் உட்கார்ந்தார்
இந்த நிலையில் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சக்கர நாற்காலியில் கருணாநிதி நேற்று முன்தினம் 30 நிமிடம் உட்கார வைக்கப்பட்டார்.

ஊர் திரும்புகின்றனர்
இதனை அறிந்த தி.மு.க. தொண்டர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கருணாநிதியின் உடல்நிலை தேறி வருவதால் ஆஸ்பத்திரியின் வெளியே தொடர்ந்து காத்துக்கிடந்த தொண்டர்கள் ஏராளமானோர் தற்போது ஊர் திரும்பி வருகின்றனர்.

மருத்துவமனைக்கு வருகை
இதனால் காவேரி மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் கூட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனிடையே அரசியல் கட்சி தலைவர்கள், சினிமாத்துறையை சேர்ந்தவர்கள், அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் வந்து விசாரித்து செல்கின்றனர்.

விளக்கம்
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், மு.க.அழகிரி, கனிமொழி எம்.பி. உள்பட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் நலம் விசாரிக்க வருபவர்களுக்கு சிகிச்சை முறைகள் குறித்து விளக்கம் அளித்து வருகின்றனர்.

சென்னை வருகிறார் ஜனாதிபதி
இந்நிலையில் நாளை ஹைதராபாத்தில் உள்ள ஐ.ஐ.டி. நிறுவன பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ளும் ஜனாதிபதி ராம்நாம் கோவிந்த் பிற்பகலில் சென்னை வருகிறார். பின்னர் காவேரி மருத்துவமனைக்கு செல்லும் அவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க உள்ளார்.












Click it and Unblock the Notifications