மாணவியை கர்ப்பமாக்கி கர்ப்பத்தைக் கலைத்த பாதிரியார் - போலீஸார் வழக்கு

நெல்லை பேட்டையில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் பங்குத்தந்தையாக கடந்த 2010 ம் ஆண்டுமுதல் புளியம்பட்டியை சேர்ந்த செல்வன் (34) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த சர்ச்சை ஒட்டி புனித அந்தோணியார் ஆலயத்தின் நிர்வாகத்திற்கு உட்பட்ட உயர் நிலைப் பள்ளி ஒன்றும் உள்ளது. இப்பள்ளிக்கு பங்குத்தந்தை செல்வன் பொறுப்பாளராக இருந்து வருகிறார்.
இதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் இந்த சர்ச்சுக்கு வருவது வழக்கம். அப்படி வருபவர்களுக்கு பங்குத் தந்தை செல்வன் கிறிஸ்தவ பாடல்களை சொல்லிக் கொடுப்பது வழக்கம். அதே பகுதியை சார்ந்த ஒரு கூலித் தொழிலாளியின் பிளஸ் ஒன் படிக்கும் மகள் ரோஸ்லிக்கும் ஞாயிற்றுக்கிழமையில் பங்குத் தந்தை செல்வன் கிறிஸ்தவ பாடல்களை சொல்லிக் கொடுப்பது வழக்கம்.
சில நேரங்களில் மாலையில் பாட்டு சொல்லிக் கொடுப்பதாக கூறி மாணவியை தனது பங்களாவுக்கு அழைத்துசென்று மாணவியிடம் தவறாகப் பழகியுள்ளார் செல்வன் என்று கூறப்படுகிறது. இதில் அந்த மாணவி கர்ப்பமானார். 4 மாத கர்ப்பமான நிலையில், அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்படவே மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்றனர். அங்குதான் மாணவி கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர்கள், உறவினர்கள், பங்குத் தந்தை செல்வனிடம் போய் நியாயம் கேட்கவே அவர் கருவை கலைத்து விடுங்கள் தேவையான செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினாராம். இதையடுத்து பந்குத்தந்தையின் சொல்படியே மனைவியை ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்று ஒருவாரம் தங்க வைத்து கருக்கலைப்பு செய்துள்ளனர்.
இந்த தகவல் சர்சுக்கு வரும் மக்களுக்கு தெரியவரவே அவர்கள் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் பாதிரியார், கருக்கலைப்பு செய்த மருத்துவர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து பாதிரியாரும், மருத்துவரும் தலைமறைவாகி விட்டனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications