தனிப்பட்ட முறையில் ஓபிஎஸ், ஈபிஎஸ்சை சந்திக்காத பிரதமர் மோடி
Subscribe to Oneindia Tamil
பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்திருந்த நிலையில், அவரை ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தனிப்பட்ட முறையில் சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில் ஓ பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமலேயே பிரதமர் மோடி கர்நாடகம் புறப்பட்டு சென்றார்.

சென்னை பல்லவாரத்தில் உள்ள அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் விழாவில் பல்வேறு அரசு நலத்திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசுகையில், "பல்வேறு வள2014-ஆம் ஆண்டுக்கு முன்பு ஆண்டுக்கு 600 கிலோ மீட்டர் ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டன. 74 ஆக இருந்த விமான நிலையங்கள் 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு 150 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவிலே 380 மருத்துவ கல்லூரிகள் இருந்தன. இன்று நம்மிடத்தில் 660 மருத்துவ கல்லூரிகள் உள்ளது. கடந்த 9 ஆண்டுகளில் நமது நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை எண்ணிக்கை மூன்று மடங்காக மாறியுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நாம் தான் உலகத்திலேயே முதலிடம் வகிக்கிறோம். உலகின் மிக குறைந்த விலையில் டேட்டா இந்தியாவில் தான் வழங்கப்படுகிறது" என்று கூறினார்.
பல்லாவாரத்தில் நடைபெறும் அரசு விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், "ரூபாய் 9 ஆயிரம் கோடி செலவில் கோவை மெட்ரோ ரயில் திட்டமும், ரூபாய் 8 ஆயிரம் கோடி மதிப்பில் மதுரை ரயில் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களுக்கான கருத்துருக்களும் விரைவில் ஒன்றிய அரசுக்கு அனுப்பப் பட உள்ளது. இதற்கு ஒன்றிய அரசு விரைந்து ஒப்புதல் தரவேண்டுமென்று வேண்டுகிறேன்" என்று பேசினார்.
பல்லாவாரத்தில் நடைபெறும் அரசு விழாவில் பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின், "இந்தியாவின் 2-வது பொருளாதாரமாக விளங்கும் தமிழ்நாட்டிற்கு பல ஆண்டுகளாக ரயில்வே துறையால் போதிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்பது தமிழ்நாட்டு மக்களின் கருத்து. எனவே தமிழ்நாட்டிற்கு புதிய ரயில் திட்டங்களை அறிவிப்பதோடு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை உயர்த்தி வரவேண்டும் என்று நான் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.
பல்லாவரத்தில் உள்ள அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் அரசு விழாவில் பங்கேற்று பேசிய ஜோதிராதித்ய சிந்தியா, "2 ஆண்டுகளில் ஆண்டுக்கு 3.5 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்டதாக சென்னை ஏர்போர்ட் மாறும். கட்டமைப்பு சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளதாக பிரதமர் நம்பிக்கை கொண்டுள்ளார்" என்று கூறியுள்ளார்.
ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்ற பின்னர் அங்கிருந்து பிரதமர் மோடி கார் மூலம் புறப்பட்டு அடையார் ஐ.என்.எஸ். கடற்படை தளத்துக்கு மாலை 5.55 மணியளவில் வருகை தந்தார். அங்கிருந்து மீண்டும் ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடி, கார் மூலம் பல்லாவரத்தில் உள்ள அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்திற்கு செல்கிறார். பிரதமர் மோடி சாலை மார்க்கமாக செல்வதால் ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, "பெண்கள் முன்னேற்றத்தை விவேகானந்தர் வலியுறுத்தினார் அவரது நோக்கத்தை அரசு நிறைவேற்றி வருகிறது. இந்தியா குறித்த சிறப்பான தொலைநோக்கு பார்வையை விவேகானந்தர் கொண்டிருந்தார். தங்கள் மீதான தடைகளை பெண்கள் தகர்த்தெறிந்து வருகின்றனர். விவேகானந்தர் வலியுறுத்திய பெண்கள் முன்னேற்றத்தை மத்திய அரசு நிறைவேற்றி வருகிறது. விவேகானந்தரை ஹீரோ போல வரவேற்ற இடம் தமிழகம்" என்று பேசினார்.
சென்னையின் உத்வேகம் எனக்கு மிகவும் பிடித்தமானது. நான் தமிழ் மொழியையும் தமிழ் கலாசாரத்தையும் நேசிக்கிறேன் என்று ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி பேசினார். பிரதமர் மோடி மேலும் கூறுகையில், "விவேகானந்தர் மீதான தாக்கம் தமிழகத்தில் அதிகம் உள்ளது. ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற உணர்ச்சியோடுதான் ராமகிருஷ்ண மடமும் செயல்படுகிறது. அனைவருக்கும் சமமான நிலையை உறுதிப்படுத்தினால் சமூகம் முன்னேறும்" என்றார்.
சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டார். அடுத்ததாக மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லத்தில் நடக்கும் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பயணிகள் சென்னை-கோவை வந்தே பாரத் ரயிலில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்ய வாய்ப்புள்ளது. அதன்படி சென்னை-கோவை இடையே ரயிலில் பயணிக்க உணவுடன் சேர்த்து ஏசி சேர் கார் பெட்டிக்கான கட்டணம் நபர் ஒன்றுக்கு ரூ.1,215 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் உணவுடன் சேர்த்து எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் கட்டணம் ரூ.2,310 ஆக நிர்ணயம் உள்ளது. உணவு வேண்டாம் என்றால் ஏசி சேர் கார் பெட்டியில் பயணம் செய்ய டிக்கெட் கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.1,057 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் உணவின்றி எக்ஸிக்யூட்டிவ் சேர் கார் கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ.2,116 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
வாரந்தோறும் புதன்கிழமை தவிர்த்து மற்ற 6 நாட்கள் சென்னை சென்ட்ரலில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் மதியம் இரவு 8.15 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை அடையும். இந்த ரயில் சேலத்துக்கு மாலை 5.48 மணிக்கு வந்து 5.50 மணிக்கு புறப்படும். ஈரோட்டுக்கு மாலை 6.32 மணிக்கு வந்து மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு செல்லும். அதன்பிறகு இரவு 7.13 மணிக்கு திருப்பூர் செல்லும் ரயில் அங்கிருந்து இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு கோவையை அடையும்.
வாரந்தோறும் புதன்கிழமை தவிர்த்து சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேலம், ஈரோடு, திருப்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்ல உள்ளது. தினமும் காலை 6 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும். இந்த கோவை-சென்னை வந்தே பாரத் ரயில் காலை 6.35 மணிக்கு திருப்பூரை அடையும். அங்கிருந்து 6.37 மணிக்கு புறப்பட்டு காலை 7.12 மணிக்கு ஈரோடு செல்லும். அங்கிருந்து காலை 7.15 மணிக்கு புறப்பட்டு காலை 7.58 மணிக்கு சேலம் செல்லும். சேலத்தில் இருந்து 8 மணிக்கு புறப்பட்டு காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரலை அடைய உள்ளது.
ஹைதராபாத்தில் இருந்து இன்னும் சில நிமிடங்களில் பிரதமர் நரேந்திர மோடி சென்னை விமான நிலையத்துக்கு வருகை தர உள்ளார். மதியம் 2.45 மணிக்கு பிரதமர் மோடி வருகிறார். பிரதமர் மோடியை வரவேற்க ஆளுநர் ஆர்என் ரவி, முதல்வர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டவர்கள் விமான நிலையத்தில் தயாராக உள்ளார்.
மாலை 4.25 மணியளவில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள விவேகானந்தர் இல்லம் புறப்பட்டு செல்கிறார். அங்கு மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். அதன்பிறகு பல்லாவரம் அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் விழாவில் கலந்துகொண்ட பல்வேறு ரயில் சேவை, புதிய பாலம், புதிய சாலைகளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.
இரவு 7.45 மணிக்கு சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி விமானத்தில் கர்நாடகா புறப்பட்டு செல்கிறார். இரவு 8.40 மணியளவில் கர்நாடக மாநிலம் மைசூரு சென்று ஓய்வு எடுப்பதோடு நாளை காலை ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு நீலகிரி தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு வருகிறார். அங்கு ஆஸ்கர் விருது வென்ற ஆவணப்படத்தின் கதாநாயகர்களான பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்திக்க உள்ளார்.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி


















Click it and Unblock the Notifications