ஈஷா யோக மையத்தில் ஆதியோகி சிவன் சிலையை திறந்து வைத்தார் மோடி
கோவை ஈஷா யோகா மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 112 அடி உயர ஆதி யோக சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
கோவை: ஈஷா யோகா மையத்தில் நிறுவப்பட்டிருந்த 112 அடி உயர சிவன் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இன்று மகா சிவராத்திரியையொட்டி கோவை ஈஷா மையத்தில் 112 அடி உயர சிவன் சிலை நிறுவப்பட்டது. இதைத் திறப்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி கோவை விமான நிலையத்துக்கு வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடைபெறும் இடத்தை அடைந்தார். தமிழக- கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதியில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்ட தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது, யானைகள் உலவும் இடத்தில் ஈஷா யோகா மையத்தால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கோயில் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, 200-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது தமிழகம் வராத பிரதமர், தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர், தந்தை பெரியார் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் விமான நிலையம் வரும் பிரதமர் விழா நடைபெறும் இடத்தில் சாலை மார்க்கமாக செல்லமாட்டார் என்பதை தெரிந்த போராட்டக்காரர்கள் கருப்பு நிற பலூன்களை பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஹெலிகாப்டர் மூலம், நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, தியான லிங்கத்திற்கு தீபாராதனை செய்தார். பிறகு சிறிது நேரம் அமர்ந்து தியானம் செய்தார். அப்போது நெருப்பை கொண்டு யோக கலைஞர்கள் யோக வழியில் வழிபாடு நடத்தினர். பின்னணியில் மந்திர இசை முழங்கியது. 112 அடி உயர ஆதியோக சிவன் சிலையை திறந்து வைத்தார். முன்னதாக ஈஷா யோகா மையத்தின் தலைவர் ஜக்கி வாசுதேவ் மையத்தை, மோடிக்கு சுற்றி காண்பித்தார்.
ஆதியோகி புத்தகத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications