பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கோவை வந்தார் மோடி.. எடப்பாடியார் வரவேற்பு
கோவை: கோவை விமான நிலையம் வந்த பிரதமர் மோடிக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவை அருகேயுள்ள ஈஷா யோக மைய மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்க மோடி இன்று மாலை 5.45 மணியளவில் கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் ஆளுநர் வித்யாசாகர் ராவ் வரவேற்பளித்தார். அதேபோல முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் வரவேற்பளித்தார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் வரவேற்பளித்தார்.

இந்நிலையில் தமிழக- கேரள எல்லையில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள பகுதியில் நிகழ்ச்சி நடைபெறவுள்ளதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்ட தமிழக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது, யானைகள் உலவும் இடத்தில் ஈஷா யோகா மையத்தால் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கோயில் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வது, 200-க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்ட போது தமிழகம் வராத பிரதமர், தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உள்ளிட்டவைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர், தந்தை பெரியார் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். மேலும் விமான நிலையம் வரும் பிரதமர் விழா நடைபெறும் இடத்தில் சாலை மார்க்கமாக செல்லமாட்டார் என்பதை தெரிந்த போராட்டக்காரர்கள் கருப்பு நிற பலூன்களை பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications