சென்னை புழல் சிறையில் கைதி தற்கொலை - 700 கைதிகள் உண்ணாவிரதம்!
சென்னை: சென்னை மத்திய புழல் சிறையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் மதிவண்ணன் என்கிற ஆயுள் கைதி சிறை அதிகாரி முன்பு கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டதால் 700க்கும் மேற்பட்ட கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மதிவண்ணன் என்ற கைதி 12 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தும் சிறைத்துறையும் அரசும் தன்னை விடுதலை செய்யவில்லை என்பதால் மன உளைச்சலால் இன்று அதிகாலை தூக்கிட்டு தன் உயிரை மாய்த்துக்கொண்டார்.

அவர் எழுதிவைத்துள்ள கடிதத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் தண்டனை அனுபவித்து வந்தும் மனம் திருந்தி சமூகத்தில் சாதாரண மனிதர்களை போல் வாழ்வதற்கான உரிமையை மறுக்கும் மனித உரிமை மீறலில் ஈடுபடும் சிறைத்துறை மட்டும் தமிழக அரசின் மெத்தனப்போக்கால் ஏற்பட்ட மன உளைச்சல் தான் காரணம் என்றும் வேறு யாரும் காரணமில்லை என்று எழுதிவைத்துள்ளார்.
12 ஆண்டுகள் தண்டனை முடித்த கைதிகளை விடுதலை செய்யவேண்டும். மதிவண்ணன் எழுதிவைத்த கடிதம் வெளியிடப்படவேண்டும் தமிழக முதல்வர் அக்கடிதத்தை பார்த்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி புழல் சிறைவாசிகள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மதி எழதிவைத்த கடிதத்தை சிறை கண்காணிப்பாளர் கைப்பற்றிவிட்டார். அதனால் நீதி கேட்டு சிறையில் உள்ள 700க்கும் மேற்பட்ட கைதிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications