கோவை சிறையில் துன்புறுத்தல்.. நீதிமன்ற வளாகத்தில் சட்டையை கழற்றி கைதி தர்ணா.. பரபரப்பு!
சிறையில் துன்புறுத்தப்படுவதாக நீதிமன்ற வளாகத்தில் கைதி ஒருவர் சட்டையை கழற்றி முழக்கமிட்டார்.
கோவை: சிறையில்துன்புறுத்தப்படுவதாக நீதிமன்ற வளாகத்தில் கைதி ஒருவர் சட்டையை கழற்றி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை காந்திமா நகரை சேர்ந்த சஞ்சை ராஜா 26, கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் உள்ளார்.

இந்நிலையில் அடிதடி வழக்கில் தொடர்புடைய அவரை 6-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த போலீசார் அழைத்து சென்றனர். அப்போது நீதிபதியிடம் சில கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார். பின்னர் மீண்டும் அவரை சிறையிலடைப்பதற்காக அழைத்து வந்து கொண்டிருந்தனர். அப்போது நீதிமன்ற வளாகத்திலேயே கைதி திடீரென்று பரபரப்பை ஏற்படுத்தினார்.
முன்பகை காரணமாக கடந்த ஒரு மாதமாக சிறை காவல் கண்காணிப்பாளர் தனிமை சிறையில் அடைத்து நிர்வாணப்படுத்தி துன்புறுத்துவதாகவும், மருத்துவ வசதி தேவை எனவும், சிறை மாற்ற வேண்டும் என்றும் கோரியும், நீதிமன்ற வளாகத்திலேயே சட்டையை கழற்றி முழக்கமிட்டார்.
பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணாவிலும் ஈடுபட்டார். ஆனால் அவரை தடுத்து நிறுத்திய பாதுகாப்பு போலீசார், கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என உறுதி அளித்து சமாதானம் செய்து சிறைக்கு அழைத்து சென்றனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications