சிறுநீரக தானம் செய்த கைதி சிறையில் மரணம்…..
சேலம்: சேலத்தில் விசாரணைக் கைதி சிறையில் மரணமடைந்துள்ள நிகழ்ச்சி பதற்றத்தைக் கிளப்பியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள கொக்கராயன்பேட்டை, அம்மாசிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜவேல். பள்ளிபாளையம் பகுதியில் மாதேஸ்வரன் என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட இவர் கடந்த வருடம் ஏப்ரல் அன்று சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சேலம் மத்திய சிறையின் 7-ஆவது தொகுதியில் உள்ள சிறை அறையில் 4 கைதிகளுடன் சேர்த்து ராஜவேல் அடைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், வியாழக்கிழமை காலை இதர கைதிகள் எழுந்து வெளியே வந்த பிறகும் ராஜவேலு வரவில்லை. இதுகுறித்து சிறை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவர்களின் பரிசோதனையில் ராஜவேலு உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரது உடல் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் எவ்வாறு உயிரிழந்தார் என்பது குறித்து அஸ்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சிறைக் கைதி உயிரிழந்திருப்பது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணையும் நடைபெறுகிறது. உயிரிழந்த ராஜவேல், தனது ஒரு சிறுநீரகத்தை தானம் வழங்கியவர் என்றும், அவருக்கு அடிக்கடி உடல் நலக் குறைவு ஏற்படுவது வழக்கம் என்றும் சிறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications