ஜெ.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தனியார் பேருந்துகள் ஸ்டிரைக்... பயணிகள் அவதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று தனியார் பேருந்துகள் ஸ்டிரைக்கில் குதித்ததால் பயணிகள் பெரும் பாதிப்பைச் சந்தித்தனர்.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தனியார் பேருந்துகள் இன்று ஓடவில்லை.

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவும், அவரை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இன்று பஸ் ஸ்டிரைக்

இன்று பஸ் ஸ்டிரைக்

இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இன்று ஒரு நாள் மட்டும் தனியார் பஸ்கள் அனைத்தும் இயங்காது என்று பஸ் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

ஜெ.வுக்கு ஆதரவாக

ஜெ.வுக்கு ஆதரவாக

இதுகுறித்து நேற்று சங்கங்களின் சம்மேளனத்தின் தலைவர் கே.தங்கராஜ் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஒருமித்த ஆதரவை தெரிவிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் 30 மாவட்டங்களில் ஓடும் 6 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பஸ்கள் இயக்கப்படமாட்டாது. இந்த போராட்டத்தின் போது காலை 6 மணியில் இருந்து மாலை 6 மணி வரை சாலைகளில் எந்த தனியார் பஸ்களும் ஓடாது.

உண்ணாவிரதமும்

உண்ணாவிரதமும்

மேலும், ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக மாவட்ட தலைநகரங்களில் தமிழ்நாடு பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் அமைதியான முறையில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போராட்டமும் நடக்கிறது. இதில் அனைத்து பஸ் உரிமையாளர்கள், டிரைவர் கள், கண்டக்டர்கள், தொழிலாளர்கள் கலந்து கொள்வார்கள் என்றார்.

காலை 6 மணி முதலே ஓடவில்லை

காலை 6 மணி முதலே ஓடவில்லை

இன்று காலை 6 மணியிலிருந்தே தனியார் பஸ்கள் எங்குமே ஓடவில்லை. அனைத்துத் தனியார் பேருந்துகளும் நிறுத்தப்பட்டதால் பஸ் நிலையங்கள் வெறிச்சோடின.

வேலூரில்

வேலூரில்

வேலூர் மாவட்டத்தில் 300 பஸ்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 217 தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக அரசு பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

உண்ணாவிரதம்

உண்ணாவிரதம்

திருவண்ணாமலையில் காந்திசிலை அருகில் தனியார் பஸ் உரிமையாளர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதே போல் வேலூரிலும் தனியார் பஸ் உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூரில்

வேலூரில்

வேலூர் மாவட்டத்தில் 300 பஸ்களும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 217 தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை. இதன் காரணமாக அரசு பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

உண்ணாவிரதம்

உண்ணாவிரதம்

திருவண்ணாமலையில் காந்திசிலை அருகில் தனியார் பஸ் உரிமையாளர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். இதே போல் வேலூரிலும் தனியார் பஸ் உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு நிலவரம்

ஈரோடு நிலவரம்

ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 270 தனியார் பஸ்கள் ஓடுகிறது. வேலை நிறுத்தத்தையொட்டி இந்த பஸ்கள் யாவும் ஓடவில்லை. ஆங்காங்கே உள்ள செட்டுகளில் பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தனியார் பஸ் டிரைவர்-கண்டக்டர்கள் ஈரோடு சி.என்.சி. கல்லூரி முன்பு உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டனர்.

திண்டுக்கலில் பாதிப்பு இல்லை

திண்டுக்கலில் பாதிப்பு இல்லை

திண்டுக்கல் மாவட்டத்தில் ஓடும் சுமார் 100-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் ஓடவில்லை. அரசு பஸ்கள் ஓடியதால் பொதுமக்களுக்கு சிறிதளவே பாதிப்பு ஏற்பட்டது. தனியார் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்த கிராம மக்கள் வெளியூர் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.

ஷேர் ஆட்டோக்களுக்கு கிராக்கி

ஷேர் ஆட்டோக்களுக்கு கிராக்கி

கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் தனியார் பஸ்கள் எதுவும் இயங்கவில்லை. அதே வேளையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஷேர் ஆட்டோக்களும் ஓடின. ஆனாலும் தனியார் பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

கோவையில்

கோவையில்

கோவையில் உள்ள 350 தனியார் பஸ்கள் இயங்கவில்லை. பஸ் உரிமையாளர்கள் சார்பில் காந்திபுரம் பஸ் நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

திருப்பூரில் சிரமம்

திருப்பூரில் சிரமம்

திருப்பூர் மாவட்டத்தில் இயங்கும் 204 பஸ்களின் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.

திருச்சியில்

திருச்சியில்

திருச்சி மாநகர பகுதிகளில் 147 தனியார் பஸ்களும், புறநகர் பகுதிகளில் 222 தனியார் பஸ்களும் என மொத்தம் திருச்சி மாவட்டத்தில் 374 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று அனைத்து தனியார் பஸ்களும் பணிமனைகளில் நிறுத்தி வைக்கப்பட்டன. தனியார் பஸ்களின் உரிமையாளர்கள் சங்க அலுவலகம் அருகே உண்ணாவிரத போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

கரூரில்

கரூரில்

கரூர் மாவட்டத்தில் இன்று 146 தனியார் பஸ்கள் இயங்கவில்லை. மேலும் தனியார் பஸ் உரிமையாளர்கள் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர்.தனியார் பஸ்களை தொடர்ந்து மினி பஸ்களும் கரூர் மாவட்டத்தில் இன்று இயங்கவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் 127 தனியார் பஸ்கலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 48 பஸ்களும், அரியலூர் மாவட்டத்தில் 28 தனியார் பஸ்களும் இயங்கவில்லை.

மதுரையில்

மதுரையில்

மதுரை மாவட்டத்தில் 200 தனியார் பஸ்கள் இன்று காலை முதல் ஓடவில்லை. மினி பஸ்கள் நிறுத்தப்பட்டதால் அந்த வழிடத்தில் ஓடிய ஆட்டோக்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேசமயம், நகரில் அரசு டவுன் பஸ்கள் மட்டுமே இருப்பதால் நகர்ப்புறத்தில் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படவில்லை.

தஞ்சையில்

தஞ்சையில்

தஞ்சை மாவட்டத்தில் 160 தனியார் பஸ்கள் ஓடவில்லை. தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் இன்று தஞ்சை பனகல் கட்டடம் முன் உண்ணாவிரதம் இருந்தனர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

சேலத்தில் உண்ணாவிரதம்

சேலத்தில் உண்ணாவிரதம்

சேலம் பழைய நாட்டாண்மை கழக கட்டி டம் முன்பு இன்று காலை சேலம் மாவட்ட பஸ் உரிமை யாளர்கள் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டமும் நடந்தது.

தர்மபுரி - கிருஷ்ணகிரி

தர்மபுரி - கிருஷ்ணகிரி

தர்மபுரி மாவட்டத்திலும் இன்று தனியார் பஸ்கள் இயங்கவில்லை. மாவட்டம் முழுவதும் 160 பஸ்கள் இன்று ஓடவில்லை. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதி களுக்கும் மொத்தம் 90 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்கள் அனைத்தும் இன்று இயங்கவில்லை.

நாமக்கல்

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று 168 தனியார் பஸ்கள் ஓடவில்லை. நாமக்கல்லில் இருந்து சேலம். ராசிபுரம். திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், பள்ளிப்பாளையம், குமாரபாளையம், சேந்த மங்கலம், ஈரோடு, கரூர், துறையூர், காட்டுப்புத்தூர், மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் தனியார் பஸ்கள் ஓடவில்லை.

தேனி

தேனி

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். திண்டுக்கல்லில் இருந்து மதுரை, பழனி, தேனி விருதுநகர், கரூர், காரைக்குடி உள்ளிட்ட நகரங்களுக்கும், நிலக்கோட்டை, பஞ்சம்பட்டி, அம்மையநாயக்கனூர், செந்துறை, உள்ளிட்ட கிராமங்களுக்கும் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் அந்த கிராம மக்கள் வெளியூர் செல்ல முடியாமல் தவித்தனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் 54 தனியார் பஸ்கள் இன்று இயக்கப்படவில்லை. இதனால் கிராமப்புற மக்கள் பாதிக்கப்பட்டனர்.

சென்னையில் பாதிப்பில்லை

சென்னையில் பாதிப்பில்லை

சென்னையில் தனியார் பஸ்கள் கிடையாது என்பதால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+