ராணிப்பேட்டை அருகே ஊதுபத்தி ஆலையில் தீ விபத்து.. பல லட்சம் மூலப்பொருட்கள் கருகின
தனியார் ஊதுபத்தி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுது.
Recommended Video

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே தனியார் ஊதுபத்தி தயாரிப்பு ஆலை குடோனில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை அருகே உள்ள பகுதி வன்னிமேடு. இங்கு இண்டர்நேசனல் அகர்பத்தி என்ற தனியார் தொழிற்சாலை குடோன் ஒன்று இயங்கிவருகிறது.

இந்நிலையில் இன்று காலை இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ராணிப்பேட்டை, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர்.
தீ மளமளவென பற்றி எரிந்து வருவதால் அந்த பகுதியே புகை மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூலப்பொருட்கள் கருகியும், மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications