மகளின் கூடைப்பந்து விளையாட்டை பார்க்க புதுவை வந்தார் பிரியங்கா காந்தி !
புதுச்சேரி: மகளின் கூடைப்பந்து விளையாட்டை பார்க்க புதுவைக்கு வந்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி
மகளின் கூடைப் பந்து விளையாட்டை பார்க்க பிரியங்கா காந்தி இன்று புதுவை வந்துள்ளார். அகில இந்திய இளையோர் கூடைப்பந்து போட்டி நாளை புதுவையில் தொடங்குகிறது. வரும் 8-ம் தேதி வரை நடைபெறும் போட்டியில் 25 மாநில அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் டெல்லி அணி சார்பில் பிரியங்கா காந்தி மகள் மரியா பங்கேற்று விளையாட உள்ளார்.

முன்னதாக பிரியங்கா காந்தியின் வருகை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுக்கு மட்டும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் வந்த பிரியங்கா மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு வந்து இறங்கினார். பின்னர் அங்கிருந்து காரில் புதுச்சேரி புறப்பட்டுச் சென்றார்.
மேலும் அவரது வருகையையொட்டி பேனர், கட் அவுட்கள், தோரணங்கள் என எதுவும் வைக்க கூடாது எனவும் அப்படி யாராவது வைத்தால் அவர்கள் மீது அகில இந்திய கட்சி தலைமை நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் பிரியங்காவின் வருகை ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications