நாங்க எப்பவும் மாறவே மாட்டோம்... தினகரனுக்கு அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் சப்போர்ட்!

டிடிவி தினகரனுக்கு அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களான தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிடிவி தினகரனுக்கு அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களான தமிமுன் அன்சாரி, கருணாஸ், தனியரசு ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தங்களின் ஆதரவு குறித்து மூன்று பேரும் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.

டிடிவி தினகரனை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அணியினர் ஒதுக்கி வைத்துள்ளனர். இதன் மூலம் ஓபிஎஸ் அணியினர் தங்களுடன் இணைய வேண்டும் என்றும் அவர்கள் சிக்னல் கொடுத்து வருகின்றனர்.

இதனால் தினகரன் தரப்பு கடும் கடுப்பில் உள்ளது. டிடிவி தினகரனுக்கு 30க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்களான தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் டிடிவி தினகரனுக்கு தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர்.

தினகரனுக்கு பாராட்டு

தினகரனுக்கு பாராட்டு

இதுதொடர்பாக அவர்கள் 3 பேரும் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். அதில் அதிமுகவில் சோதனை ஏற்பட்டுள்ள சூழலில் துணிச்சலான நடவடிக்கையை எடுத்து வருவதாக டிடிவி தினகரனுக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

கொள்கைகளை பாதுகாக்க..

கொள்கைகளை பாதுகாக்க..

மேலும் தமிழர் உரிமைகளை பாதுகாக்கவும் தமிழ்நாட்டின் வளங்களை பாதுகாக்கவும் சமூக நீதி மற்றும் மதச்சார்பின்மை கொள்கைகளை பாதுகாக்கவும் அதிமுக ஒன்றுபட்டு வலிமை பெற வேண்டும் என்பதில் தாங்கள் தெளிவாகவும் உறுதியாகவும் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆதரவு எப்போதும் உண்டு

ஆதரவு எப்போதும் உண்டு

மேலூரில் தினகரன் தலைமையில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கும் அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதிமுகவின் அணிகளை ஒன்று சேர்க்க விரும்பும் டிடிவி தினகரனின் முயற்சிக்கு தங்களின் ஆதரவு எப்போதும் உண்டு என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

3 பேரும் கூட்டறிக்கை

3 பேரும் கூட்டறிக்கை

அதிமுக பாதுகாக்கப்பட வேண்டியது திராவிட இயக்கத்திற்கான வரலாற்று தேவை என்பதை தாங்கள் முழுமையாக உணர்ந்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். மூன்றுபேரும் கூட்டாக வெளியிட்டுள்ள கடிதத்தில் அவர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+