எஸ்.வி.சேகரை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
எஸ்.வி.சேகரை கைது செய்ய வலியுறுத்தி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Recommended Video

சென்னை: எஸ்.வி.சேகரை கைது செய்ய வலியுறுத்தியும் பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை நீக்க வேண்டும் என்றும் டியூஜே சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ஏராளமான பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு எஸ்.வி.சேகருக்கு எதிரான கண்டன முழக்கங்களை எதிவு செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், சிறப்பு அழைப்பாளர்களாக தீக்கதிர் குமரேசன், எஸ்.டி.பி.ஐ, கட்சியின் மாநிலத் தலைவர் டெஹ்லான் பார்கவி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழகத்தின் தலைவர் மற்றும் மூத்த பத்திரிகையாளர் வசீகரன், மூத்த திரைப்பட மக்கள் தொடர்பாளர் நெல்லை சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்று எஸ்.வி.சேகருக்கு எதிரான தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
எஸ்.வி.சேகரை கைது செய்யும் வரை இந்த போராட்டம் தொடரும் என்றும் ஆர்பாட்டத்தின் முடிவில் அறிவிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications