ரயில்வே கேட் திறப்பதில் தாமதம்..ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஹெளரா ரயில் மீது கல்வீச்சு
அரியலூர்: அரியலூரில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ரயில்வே கேட் திறக்கப்படாததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி - ஹெளரா விரைவு ரயில் மீது கற்களை வீசி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரியலூர் - ஆர்.எஸ். மாத்தூர் இடையே புதிய இரட்டை ரயில் பாதையில் குருவாயூர் - சென்னை விரைவு ரயிலை இயக்குவதற்காக வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு அரியலூர் - பெரம்பலூர் சாலையின் குறுக்கே ரயில்வே கேட்டில் பாதைகள் அடைக்கப்பட்டன.

மாலை 4 மணிக்கு மேல் குருவாயூர் ரயிலுக்கு பூஜை போட்டு ரயில் புறப்பட்டது. இதைத் தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் கேட்டை திறக்க முயன்றபோது, திடீரென கேட் பழுதாகி திறக்காமல் நின்றது. அப்போது குன்னம் அருகே நிகழந்த விபத்தில் காயமடைந்து ஆம்புலன்ஸில் வந்த பெண் ஒருவர் வலியால் அவதிப்பட்டு கொண்டிருந்தார்.
இதையறிந்த அந்தப் பகுதி மக்களும், பேருந்து பயணிகளும் அந்தப் பெண்ணை தூக்கி ரயில்வே கேட்டை கடந்து ஒரு ஆட்டோவில் ஏற்றி அரியலூர் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நேரத்தில் வந்த திருச்சி-ஹெளரா விரைவு ரயில் மீது கல்வீசினர். ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் என்ஜின் அருகே இருந்த கண்ணாடி உடைந்தது. பின்னர் ரயில்வே அதிகாரிகள் பொறியாளர்கள் உதவியுடன் கேட்டை சரி செய்து திறந்துவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications