தங்கச்சி மடத்தில் 3வது நாளாக போராட்டம் - பிரிட்ஜோ உடலை வாங்க மறுப்பு
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேரில் வரும் வரை பிரிட்ஜோவின் உடலை வாங்கப்போவதில்லை என கூறி ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் மீனவர்கள் 3வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேரில் வரும் வரை பிரிட்ஜோவின் உடலை வாங்கப்போவதில்லை என கூறி ராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் மீனவர்கள் 3வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
ராமேஸ்வரம் அருகேயுள்ள தங்கச்சி மடம், மாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த பிரிட்ஜோ கடந்த திங்கட்கிழமையன்று சக மீனவர்களுடன் கடலுக்குச் சென்றார். தனுஷ்கோடி, ஆதம்பாலம் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 22 வயதான பிரிட்ஜோ கழுத்தில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சில மீனவர்கள் காயமடைந்தனர்.

இலங்கை கடற்படை அட்டகாசம்
ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையின்போது பிரிட்ஜோவின் உடலில் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கிக் குண்டு அகற்றப்பட்டது. இலங்கை கடற்படையினர் அட்டகாசம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் பிரிட்ஜோவை சுட்டுக்கொல்லும் முன் படகை நோக்கி 7 முறை சுடப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட துப்பாக்கி துப்பாக்கி குண்டு தனியார் குற்றயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர் குடும்பத்திற்கு ஆறுதல்
இதனையடுத்து, மீனவர் பிரிட்ஜோவின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர், உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உயிரிழந்த மீனவரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அரசியல் கட்சித்தலைவர்கள் வைகோ, திருநாவுக்கரசர் ஆகியோர் நேரில் சென்று பிரிட்ஜோவின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறியதோடு மீனவர் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தனர்.

உடலை வாங்க மறுப்பு
வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா நேரில் வரும் வரை பிரிட்ஜோவின் உடலை வாங்கப்போவதில்லை என கூறி உறவினர்களும், பொதுமக்களும் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அரசு அறிவித்துள்ள ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையையும் வாங்க மறுத்து விட்டனர்.

மூன்றாவது நாளாக நீடிப்பு
சுட்டுக்கொன்ற இலங்கை கடற்படை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மூன்று நாட்களாக மீனவர்கள் வேலைக்கும் செல்லாமல் இறந்த மீனவர் பிரிட்ஜோ உடலை வாங்காமல் தங்கச்சி மடத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications