அலங்காநல்லூரில் நள்ளிரவை தாண்டியும் தொடரும் போராட்டம்.. கோரிக்கைகள் என்ன ?
அலங்காநல்லூரில் 14 மணிநேரத்திற்கும் மேலாக ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதுரை: அலங்காநல்லூரில் வாடி வாசல் வழியாக குறைந்தது ஐந்து காளைகளையாவது அவிழ்த்து விட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்த கோரி காலை முதலே இளைஞர்கள் குவிய தொடங்கினர். வெளியூர்களில் இருந்து வரும் இளைஞர்கள் அலங்காநல்லூரில் குவிந்து விடாத வண்ணம் காவல்துறையினர் அரண் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காவல்துறையினரின் கட்டுபாட்டையும் மீறி இளைஞர்கள் அலங்காநல்லூர் வாடி வாசல் பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.
இந்த நிலையில் அவர்களின் போராட்டம் 14 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள், வாடி வாசலில் இருந்து காளைகளை அவிழ்த்து விடும் வரை போராட்டம் தொடரும் என கூறியுள்ளனர்.
மேலும் அலங்காநல்லூரில் குறைந்தது 5 காளைகளையாவது அவிழ்த்து விட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். போராட்டத்தில் பங்கேற்றுள்ள இளைஞர்களுக்கு அலங்காநல்லூர் கிராம மக்கள் உணவு வழங்கியும் தங்களது ஆதரவையும் தெரிவித்துள்ளனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் அதிகாரப்பூர்வமாக தங்களது கோரிக்கைகள் என்ன என்பது செவ்வாய்க்கிழமை காலை அறிவிப்போம் என போராடும் இளைஞர்கள் அறிவித்துள்ளனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications