பாஜகவிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்.. ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம்
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரும் போராட்டங்கள் தமிழகத்தில் வலுபெற்றுள்ளன. உசிலம்பட்டியில் இன்று 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உசிலம்பட்டி: ஜல்லிக்கட்டை இந்த ஆண்டு கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று கோரி தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் சார்பில் உசிலம்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் திருவிழாவின் போது நடத்தப்பட வேண்டிய ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்தப்படாமல் முடங்கிப் போய்யுள்ளது. இதனால் தென் மாவட்டங்களைச் சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள்.

மத்திய அரசும் இதோ அதோ என்கிறதே தவிர அதற்கான எந்த ஏற்பாட்டையும் செய்யவில்லை. அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் ஏற்கனவே இருந்த கட்சிகளை திட்டித் தீர்க்கின்றார்களே ஒழிய, அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை சொல்லாமல் நழுவி வருகின்றனர். அதிகபட்சமாக, கண்டிப்பாக இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடக்கும் என்றும் அதற்கான முயற்சிகளை மத்திய அரசு செய்து வருகிறது என்றும் சொல்லிவிட்டு இருவரும் சென்றுவிடுவார்கள்.
இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் மதுரையை அடுத்த உசிலம்பட்டியில் ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அக்கட்சியின் மாநில தலைவர் சங்கிலி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்தும், ஜல்லிக்கட்டை நடத்தக் கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்.
அதே போன்று அலங்காநல்லூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தை நடத்தினார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications