திமுகவை ஆதரித்து ஏற்காட்டில் பிரசாரம் செய்வேன்.. டாக்டர் கிருஷ்ணசாமி
குற்றாலம்: ஏற்காடு இடைத் தேர்தலில் திமுகவை ஆதரித்துப் பிரசாரம் செய்யப் போவதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து இரு தொகுதிகளில் வென்ற கட்சி புதிய தமிழகம். ஆனால் அதன் தலைவர் கிருஷ்ணசாமிக்கும், அதிமுக மேலிடத்திற்கும் ஒத்துப் போகவில்லை. எனவே அவர் மட்டும் தனித்து செயல்பட்டு வருகிறார். அவரது கட்சியின் இன்னொரு எம்.எல்.ஏவான நிலக்கோட்டை ராமசாமி அதிமுகவுடன் அணுசரணையாக இருக்கிறார்.
இந்த நிலையில் ஏற்காடு இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் மாறனை ஆதரித்துப் பிரசாரம் செய்யப் போவதாக டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

இதுகுறித்து குற்றாலத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பரமக்குடி சம்பவம் தொடர்பாக நீதிபதி சம்பத் விசாரணை அறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை திரும்ப பெறவேண்டும் என்பதை வலியுறுத்தி வரும் 30ம் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு தனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
ஏற்காடு இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு என கருணாநிதியிடம் நேரடியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் அடுத்த இம்மாத இறுதியில் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.
புளியரை பகுதியில் 40க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் ஈத்தல் தொழில் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அத்தொழிலை முடக்கும் வகையில் அங்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே இது தொடர்பாக தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தென்காசியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அமைத்திட வேண்டுமென கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சிவகிரி, தென்காசி பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர். எனவே தென்காசி தனிமாவட்டம் அமைத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுஒழிப்பு, புதிய தொழில், இளைஞர் எழுச்சி என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழி...தமிழா, எழு தமிழா என்ற கோரிக்கையினை முன்வைத்து 40 நாடாளுமன்றத் தொகுதியிலும் கிராமங்கள் தோறும் டிசம்பர் 3ம் தேதி முதல் பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது என்றார் அவர்.
-
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்யை வளர விடக்கூடாது.. உதயநிதி டீமுக்கு போகும் "பவர்"?.. மைசூரில் ஸ்டாலின் போடும் பெரிய பிளான் -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா?












Click it and Unblock the Notifications