அதிமுக ஆதரவு அணிக்கு தாவுகிறார் புதிய தமிழகம் எம்.எல்.ஏ. ராமசாமி!
Subscribe to Oneindia Tamil

தேமுதிகவின் 7 எம்.எல்.ஏக்கள் அதிமுகவை ஆதரிக்கின்றனர். இதேபோல் புதிய தமிழகம் கட்சியின் நிலக்கோட்டை எம்.எல்.ஏ. ராமசாமியும் அதிமுகவில் இணைவார் என்று சில மாதங்களுக்கு முன்பு தகவல் பரவியது.
ஆனால் இதை புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் எம்.எல்.ஏ. ராமசாமியும் மறுத்துவிட்டனர். ஆனால் தற்போது எம்.எல்.ஏ ராமசாமியே தமக்கு வாய்ப்பு கிடைத்தால் அதிமுக அணிக்கு செல்வேன் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பாக ராமசாமி கூறி இருப்பதாவது: டாக்டர் கிருஷ்ணசாமியுடன் பேசி 5 மாதங்களாகின்றன. என் மீதான வேடசந்தூர் ஒப்பந்ததாரர் நாகராஜின் புகாருக்கு எங்கள் கட்சி வழக்கறிஞர் ஒருவர்தான் பின்னணி.
அ.தி.மு.க.,வினர் என்னிடம் பேச்சு நடத்தியது உண்மையே. இப்போதைக்கு அங்கே செல்லும் எண்ணமில்லை. அதே நேரத்தில் வாய்ப்பு அமைந்தால் செல்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications