பிடிஆரின் பேஸ்புக் பக்கத்தில் குழப்பம்.. கைவிட்டுப்போன நிதித்துறை! புரியாமல் வாழ்த்திய நெட்டிசன்கள்
சென்னை: தமிழ்நாடு நிதியமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு இருக்கும் நிலையில், அவரது பேஸ்புக்கில் இன்று மாற்றிய பயோ பலரை குழப்பமடைய செய்து உள்ளது.
முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இந்த நிலையில் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.
இன்று காலை ஆளுநர் மாளிகையின் தர்பார் அரங்கில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு அமைச்சராக டிஆர்பி ராஜா பதவியேற்றார். அவருக்கு தொழிற்துறை இலாக்கா ஒதுக்கப்பட்டு உள்ளது. தொழிற்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவிடம் நிதித்துறை வழங்கப்பட்டு இருக்கிறது.

மனோ தங்கராஜ் வசம் இருந்த தகவல் தொழில்நுட்பத்துறை நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜனிடம் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் பிடிஆரை நிதித்துறையில் இருந்து மாற்றியதற்கு எதிராக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் ட்விட்டரில் விரிவான பதிவு ஒன்றை அவர் வெளியிட்டார்.
அதில், "கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்விலேயே மிகவும் நிறைவான ஆண்டுகளாகும். மாண்புமிகு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையின் கீழ் பெருந்தொற்றுக் காலத்தில் ஒரு திருத்தப்பட்ட பட்ஜெட்டையும் ('21 - '22), பெருந்தொற்றுக்குப் பிறகு இரண்டு ஆண்டு பட்ஜெட்டுகளையும் ('22 - '23, '23 - '24) சமர்ப்பித்துள்ளேன்.
முந்தைய ஆட்சியின் விளைவாக உட்சபட்ச பற்றாக்குறை மற்றும் கடன் விகிதங்களைப் பெற்றிருந்த போதிலும், நாங்கள் வரலாறு காணாத வகையில் சமூக நலத் திட்டங்களிலும், மூலதனச் செலவினங்களிலும் முதலீடு செய்துள்ளோம். இதனை என் பொது வாழ்விலும், என் வாழ்க்கையிலும் மிகச் சிறப்பான பகுதியாகக் கருதுகிறேன்.
நிதி ஆதாரங்களை வலுப்படுத்துதல் மற்றும் சமூக நல செலவினங்கள் ஆகியவை சமத்துவ சமுதாயத்திற்கு அவசியமான படிகள் என்றாலும், வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான உந்து சக்தியாக விளங்குவது முதலீடுகள், நிறுவன விரிவாக்கம் மற்றும் வேலை வாய்ப்புகள் உருவாக்கம் ஆகியவைகளே ஆகும்.

உலகளவில் இன்று முதலீடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான நம்பர் 1 துறையாக விளங்கும் தகவல் தொழில்நுட்ப இலக்காவை மாண்புமிகு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் எனக்குத் தற்போது வழங்கியதற்கு நான் நன்றியுள்ளவனாவேன். தொழில்நுட்பமே எதிர்காலத்தை வடிவமைக்கிறது என்பதை நாம் அறிவோம்.
தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு இத்துறையில் முன்னோடியாக இருந்தபோதிலும், கெடுவாய்ப்பாக கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறையில் நமது உண்மையான செயல் திறனை எட்டுவதில் நாம் பின்தங்கிவிட்டோம். எனவே எனக்கு முன்னாள் இத்துறையை நிருவகித்த திரு.மனோ தங்கராஜ் அவர்களின் பெருமுயற்சிகளின் தொடர்ச்சியாக இத்துறையில் கூடுதல் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கத்தை விரைவுப்படுத்துவதற்கும், தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழகத்தை மீண்டும் ஒரு முன்னணி மாநிலமாக நிலைநிறுத்தும் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
15 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு முன்னோடியான உலகளாவிய திறன் மையத்தை நிறுவி நிருவகித்ததன் மூலம் நான் பெற்ற சொந்த அனுபவமும், எனது தொழில் வாழ்வில் பெற்ற IT & ITES தொழில்துறையுடனான தொடர்புகளும் இந்த அமைச்சகப் பொறுப்பில் நான் மேற்கொள்ளும் முயற்சிகளுக்குப் பயனளிக்கும் என நம்புகிறேன்.
இன்று பொறுப்பேற்கும் மாண்புமிகு நிதியமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் வெற்றிகரமாகச் செயல்பட்டு மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துகிறேன். அவர் தனது பதவிக்காலத்தில் ஏற்கனவே நாம் எட்டியுள்ள முன்னேற்றங்களை மேலும் விரைவுபடுத்தி புதிய சாதனைகளைப் படைப்பார் என்று உறுதியாக நம்புகிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகள் நிதித்துறை பொறுப்பு வழங்கியதற்காகவும், தற்பொழுது எழுச்சிமிக்க புதிய பொறுப்பை வழங்கி மக்களுக்காகப் பணியாற்றும் வாய்ப்பை அளித்துள்ள என் தலைவர் மாண்புமிகு முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று பதிவிட்டு இருந்தார்.

பிடிஆரின் இந்த ட்விட்டர் பதிவு பல்வேறு குழப்பங்களுக்கு தெளிவை ஏற்படுத்தினாலும், அவர் பேஸ்புக் பக்கத்தில் அமைச்சரவை இலாக்கா மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு மாற்றிய பயோ பலரை குழம்ப வைத்தது. அதில் "நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர், தமிழ்நாடு - கூட்டாட்சி உணர்வுள்ள திராவிடன்" என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
அதை கேட்ட பலரும் பழனிவேல் தியாகராஜனை நிதியமைச்சராகவே அரசு தக்க வைத்து இருப்பதாக கூறி வாழ்த்தி இருந்தார்கள். ஆனால், அந்த பயோவை கிளிக் செய்தால், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகல் துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், பிடிஆரின் டைம் லைனில் சில மணி நேரங்கள், நிதியமைச்சர் என்ற பயோவே காட்டியது. இந்த நிலையில் அது பிடிஆரின் பேஸ்புக் டைம் லைனில் இருந்து அகற்றப்பட்டு உள்ளது.
-
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்! -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
சிந்தாமல் சிதறாமல் அள்ள வேண்டும்.. ஸ்மார்ட்டாக காய் நகர்த்திய ஸ்டாலின்.. என்டிஏ கூட்டணிக்கு சேதாரம் -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்?












Click it and Unblock the Notifications