எடப்பாடியின் சர்ச்சை பேச்சு- கார் சக்கரத்தை கும்பிட்டவர்களிடம் இதை தான் எதிர்பார்க்க முடியும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: திருப்பூர் சாமளாபுரத்தை சேர்ந்த பெண்கள் தான் போலீசாரை தாக்கியதாக எடப்பாடி பழனிச்சாமி சட்டசபையில் தெரிவித்தார். இதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

திருப்பூர் சாமளாபுரத்தில் கடந்த ஏப்ரல் மாதம் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். அப்போதைய ஏடிஎஸ்பி பாண்டியன் ஈஸ்வரி என்ற பெண்ணை தாக்கியதில் அவரது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில் சமாளபுரம் பெண்கள் தான் போலீசாரை தாக்கியதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இதற்கு மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான செய்திக்கு நமது வாசகர்கள் தெரிவித்துள்ள கருத்துக்களில், நாட்டில் என்ன நடக்கிறது என தெரியாமல் ஒரு முதல்வர் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

வாய்ப்பை பயன்படுத்த தெரியாதவர்

வாய்ப்பை பயன்படுத்த தெரியாதவர்

முகமது அப்துல் என்பவர் கிடைத்த வாய்ப்பை ஒழுங்கா பயன்படுத்த தெரியாத எடப்பாடி.. என தெரிவித்துள்ளார்.

தகுதி இல்லாதவர்

தகுதி இல்லாதவர்

டேனி என்ற வாசகர் இவருலாம் முதல்வருக்கு தகுதி இல்லாதவர்.. என கோபத்தை வெளிப்படுத்துகிறார்.

நல்லாவே இருக்க மாட்டிங்க

நல்லாவே இருக்க மாட்டிங்க

ஷாஹின் என்பவர் மரியாதைக்கு உரிய எடப்பாடி அவர்களே சத்தியமா நீங்க நல்லாவே இருக்க மாட்டிங்க எனக் பதிவிட்டுள்ளார்.

கார் சக்கரத்தை கும்பிட்டவர்கள்

கார் சக்கரத்தை கும்பிட்டவர்கள்

கண்மணி என்ற வாசகர் பணத்துக்காக சுயமரியாதை இழந்து கார் சக்கரத்தை கூடகும்பிட்டவர்களிடம் இதை தான் எதிர்பார்க்க முடியும்.. பதவிக்காக எதையும் செய்வார்கள் இவர்கள் என பதிவிட்டுள்ளார்.

காக்கிச்சட்டை போட்ட பொம்பளை

காக்கிச்சட்டை போட்ட பொம்பளை

விஜய்நிக் என்பவர் காக்கிச்சட்டை போட்ட பொம்பளை தான் அடிச்சது....சொல்றது நம்ம முதல்வர் என கிண்டலடித்துள்ளார்.

என்ன நடக்குதுன்னே..

என்ன நடக்குதுன்னே..

கணேஷ் என்ற வாசகர் நாட்டுல என்ன நடக்குதுன்னே தெரியாத முதல்வர் என எடப்பாடி பழனிச்சாமியை கூறியுள்ளார்.

தீப்பெட்டிக்குள்..

தீப்பெட்டிக்குள்..

வைக்கோல் போரில் எறிந்த நெருப்பைத்தான் போலீஸ் காரர்கள் எடுத்து தீப்பெட்டிக்குள் அடைத்தனர் என அப்துல் மஜ்ஜித் என்ற வாசகர் கூறியுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Chief minister Edappadi palanisami said that womens only were attacked the Police in Thirupur. Public condemns CM's speech ADSP Pandiyan promotion.
Please Wait while comments are loading...