வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குள் பாம்புகள்... சென்னை மாநகராட்சியைக் கண்டித்து சாலை மறியல்
சென்னை: சென்னை மடிப்பாக்கத்தில் வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்து விட்டதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் பெய்த பலத்த மழை காரணமாக புறநகர் பகுதிகளான மடிப்பாக்கம், ஆதம்பாக்கம்,வேளச்சேரி,புழுதிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி நிற்கிறது. ஆதம்பாக்கம், புழுதிவாக்கம் பகுதியில் தேங்கி நின்ற மழைநீரை மோட்டார்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மடிப்பாக்கம் பெரியார் நகர் பகுதியில் இதுவரை எவ்வித நிவாரண பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்குள் பாம்புகள் புகுந்திருப்பதாகவும், இதனால் அப்பகுதி மக்கள் வீடுகளுக்குள் குடியிருக்க முடியவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். மேலும் மாநகராட்சி நிர்வாகம் மழை நீரை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், மாநகராட்சி சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததியடுத்து, அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் உள்பட ஏராளமான பொதுமக்கள் பெரியார் நகர் மெயின் ரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். வீடுகளை சூழ்ந்து நிற்கும் மழைநீரை மோட்டார் மூலம் அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications