அடங்கமாட்டிங்களா... அதிமுக டிவிட்டர் பக்கத்திலேயே கழுவி கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

அதிமுக டிவிட்டர் பக்கத்திலேயே சசிகலாவை பற்றி நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகாவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் சசிகலாவை நெட்டிசன்கள் வசைபாடி வருகின்றனர். சசிகலா குறித்து எந்தகருத்தையும் பதிவிடாதீர்கள் என்றும் அதிமுப டிவிட்டர் பக்கத்தில் அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சசிகலாவுக்கு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொது மக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதா மரணத்துக்கு சசிகலாதான் காரணம் என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டதும், கட்சி மன்னார்குடியின் கட்டுப்பாட்டுக்கு சென்றதும் அதிமுக அடிமட்டத் தொண்டர்களுக்கே பிடிக்கவில்லை.

இந்நிலையில் அதிமுகாவின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் சசிகலா குறித்து வெளியிடும் தகவல்களுக்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சசிகலாவை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

நேற்றிரவு சசிகலா ஆளுநரை சந்தித்து விட்டு புறப்பட்டது குறித்து வெளியிடப்பட்ட பதிவுக்கு நெட்டிசன்களின் பதில்கள் உங்கள் பார்வைக்காக..

நாட்டை விட்டு எப்போ போவார்?

ராஜ்பவனில் இருந்து புறப்பட்டார் சசிகலா என போடப்பட்ட பதிவுக்கு நெட்டிசன் ஒருவர் சசிகலா நாட்டை விட்டு புறப்பட்டார் என எப்போது போடுவீர்கள் என கேட்டுள்ளார். சசிகலா மீது உள்ள வெறுப்பின் வெளிப்பாடாக இந்தப் பதிவு உள்ளது.

எனக்கு முதல்வர் பதவி வேனும்.. அடம்பிடிக்கும் குழந்தை..

மூக்கு ஒழுக அழுது அடம்பிடிக்கும் குழந்தையின் படத்தை போட்டுள்ளார் ஒருவர். சசிகலா முதல்வர் பதவிக்கு ஓபிஎஸுடன் மல்லுக்கட்டுவதை குறிப்பிட்டு இந்த பதிவு போடப்பட்டுள்ளது.

அதிமுகவை கெடுத்துவிடாதீர்கள்..

ஒரு பதிவுக்கூட சசிக்கு ஆதரவாக இல்லை. சசிகலா தமிழக மக்களின் இதயங்களை வெல்ல தோற்றுவிட்டார். இதனை ஏற்றுக்கொள்ளுங்கள். அதிமுகவை கெடுத்து விடாதீர்கள் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

வெட்கம் இல்லாத படைப்பு சசி

சசிகலா வெட்கமே இல்லாத ஒரு படைப்பு. நரகத்தில் அவருக்கு என தனியறை இருக்கும் என ஒருவர் தனது எதிர்ப்பை பதிவிட்டுள்ளார்.

இதுபோல் ஏரளாமான டிவிட்டர் போஸ்ட்டுகள் அதிமுக இணையதளத்தில் குவிந்து வருகின்றன. அனைத்துமே சசிகலாவுக் எதிராகதான் உள்ளது. சசிகலா குறித்து போடப்படும் ஒவ்வொரு பதிவையும் வைத்து நெட்டிசன்கள் அவரை வச்சி செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+