சென்னை அருகே திருநின்றவூரில் இன்னும் வடியாத வெள்ள நீர்... கண்ணீரில் மிதக்கும் மக்கள்
சென்னை: சென்னைக்கு அருகே திருநின்றவூரில் இன்னும் வெள்ள நீர் வடியாமல், தெருக்கள் மற்றும் வீடுகளில் இடுப்பளவு தண்ணீர் தேங்கி நிற்பதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தாண்டு வடகிழக்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக மழை தந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் பெய்த கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்தன.
குடியிருப்புகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் வடிந்து விட்டதால், மக்கள் வீடுகளுக்குத் திரும்பி விட்டனர். மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.

திருநின்றவூர்...
இந்த சூழ்நிலையில், சென்னைக்கு அருகே திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வீடுகளில் வசிக்க முடியாமல் இப்பகுதி மக்கள் பெரும் அவதிப் பட்டு வருகின்றனர்.

தூர்வாரப்படாத ஏரி...
வீடுகள் மற்றும் தெருக்களில் இடுப்பளவு தண்ணீர் நிற்பதால், பலர் வீடுகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. ஏரிகள் தூர்வாரப் படாததும், தண்ணீர் செல்லும் பாதைகளில் ஆக்கிரமிப்புகளுமே வெள்ள நீர் இன்னும் வடியாததற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

நடவடிக்கை தேவை...
இன்னும் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வராத தங்களுக்கு உணவைத் தவிர வேறு நிவாரண உதவிகள் ஏதும் கிடைக்கவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றச்சாட்டாக உள்ளது. விரைந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வெள்ள நீரை வடியச் செய்ய வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை ஆகும்.

நோய் பரவும் அபயாம்...
தற்போது வெள்ள நீருடன், கழிவுநீரும் கலந்துள்ளதால் பல நோய்கள் பரவி வரும் அபாயமும் இப்பகுதியில் உள்ளது. முக்கியமாக அதிகளவு கொசுக்கள் உற்பத்தி ஆவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

பெரிய ஏரி...
திருநின்றவூர் பெரிய ஏரியானது சுமார் 800 ஏக்கர் பரப்பளவையும், மீன் வளத்தையும் கொண்டது. இந்த ஏரியின் மூலம் சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. சமீபத்தில் பெய்த கனமழையால் இந்த பெரிய ஏரியானது முழுக் கொள்ளளவையும் எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மீன்பிடித் தொழில்...
இந்த ஏரியில் மீன்பிடித் தொழில் நடந்து வருகிறது. அதனாலேயே ஏரி தண்ணீரை வெளியே போக விடாமல் சிலர் தடுப்பதாக குற்றச்சாட்டும் உள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications