அம்மா உணவகத்துக்கு போட்டியாக புதுவையில் "சோனியா உணவகம்" வருது....

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: தமிழகத்தில் செயல்படும் அம்மா உணவகத்துக்குப் போட்டியாக புதுச்சேரியில் சோனியா உணவகம் தொடங்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

தமிழகத்தில் மலிவு விலையில் காலை, பிற்பகல் மற்றும் இரவு உணவு வழங்கௌவதற்காக அரசு சார்பில் "அம்மா உணவகங்கள்" நடத்தப்பட்டு வருகின்றன. அதிமுகவினர் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுவினரைக் கொண்டு இந்த அம்மா உணவகங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

Pudhucherry govt will launche "Sonia canteens"

வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கூட அம்மா உணவகங்களைப் பார்வையிட்டு செல்கின்றனர். ஆந்திராவில் இதே பாணியில் "அண்ணா உணவகம்" (என்.டி.ஆர். நினைவாக) தொடங்கப்பட்டுள்ளது.. கர்நாடகாவும் இதே பாணியை பின்பற்றும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது புதுச்சேரியில் "சோனியா உணவகம்" என்ற பெயரில் மலிவு விலை உணவகங்கள் அமைக்கப்படும் என்று அம்மாநில அமைச்சர் கந்தசாமி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் அம்மா உணவகத்துக்குப் போட்டியாக 'அன்னை' உணவகம் என பெயரிடலாம் எனவும் கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+