முதல்வர் நாராயணசாமி தலைமையிலான புதுவை அமைச்சரவை பட்டியல் வெளியீடு !
புதுவை: முதல்வர் நாராயணசாமி தலைமையிலான புதுச்சேரி மாநில அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நிதி, பொது நிர்வாகம், உள்துறை, இந்து சமய அறநிலையத் துறையை தன் வசம் கொண்டுள்ளார் நாராயணசாமி.
புதுச்சேரி சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் போட்டியிட்டது. இக்கூட்டணிக்கு 17 இடங்களில் வெற்றி கிடைத்தது. இதையடுத்து கடந்த 6 ஆம் தேதி நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றது. முதல்வராக நாராயணசாமி பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

அதைத் தொடர்ந்து அமைச்சர்களாக மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோரும் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். மல்லாடி கிருஷ்ணா ராவ் தெலுங்கில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். அமைச்சராகப் பதவியேற்றுள்ள ஷாஜகான், மறைந்த கேரள மாநில முன்னாள் ஆளுநர் எம்.ஓ.எச். பாரூக் மரைக்காயரின் மகன் ஆவார். பதவியேற்ற அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் ஒதுக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
நாராயணசாமி - நிதி, பொது நிர்வாகம், உள்துறை, இந்து சமய அறநிலையத் துறை
நமச்சிவாயம் - பொதுப்பணித் துறை, மக்கள் நல்வாழ்வு, கால்நடைத் துறை
மல்லாடி கிருஷ்ணராவ் - சுற்றுலா துறை, வீட்டு வசதி, மீன்வளம், இளைஞர் நலன் துறை
ஷாஜகான் - வருவாய்த் துறை, தகவல் தொழில் நுட்பம், போக்குவரத்து துறை
கந்தசாமி - சமூக நலன், தொழிலாளர் நலன், பொது விநியோகத் துறை
கமலக்கண்ணன் - மின்சாரம், கல்வி, வேளாண்மை துறை
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications