ஜல்லிக்கட்டுக்கு விரைந்து ஏற்பாடு செய்யுங்கள்... பிரதமருக்கு புதுச்சேரி முதல்வர் கடிதம்
ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடிதம் எழுதியுள்ளார். புதுச்சேரி மக்களும் ஜல்லிக்கட்டை விரும்புவதாக அவர் குறிப்பிட்
புதுச்சேரி: ஜல்லிக்கட்டு தொடர்பாக புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளா. அதில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தக்கோரி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய போராட்டம் தற்பொது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தமிழகம் புதுச்சேரி மட்டுமின்றி நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வரும் மாணவர்களுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் போராடி வருகின்றனர். ஆங்காங்கே ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடையடைப்புகளும் ரயில் மறியல்களும் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும்.
தமிழகம் மட்டுமின்றி புதுச்சேரி மக்களும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நேசிக்கிறார்கள். எனவே ஜல்லிக்கட்டுக்கு விரைந்து ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications