புதுச்சேரி சிறுமிகள் பலாத்கார வழக்கு: 6 போலீசார் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிப்பு
புதுவை: புதுச்சேரியில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பணி நீக்கம் செய்யப்பட்ட 6 போலீசாரும் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்ட சி.பி.சி.ஐ.டி எஸ்.பி. வெங்கடசாமி 6 போலீசாரின் புகைப்படங்களையும் வெளியிட்டார்.
புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் பாலியல் தொழில் கும்பலிடம் இருந்து சிறுமிகள் கடந்த ஆண்டு ஏப்ரலில் மீட்கப்பட்டனர். புதுச்சேரி போலீசாரும் அவர்களை பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரிந்தது.

சிறுமிகளை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர், யுவராஜ், சப் இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், பாட்ஷா, தலைமைக் காவலர்கள் குமரவேல், பண்டரிநாதன், காவலர்கள் சங்கர், செல்வகுமார், ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ராஜாராம் ஆகியோர் மீது புதுச்சேரி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து அவர்கள் தலைமறைவாகிவிட்டனர்.
இந்நிலையில் ஐ.ஜி பிரவீர் ரஞ்சன் உத்தரவின் பேரில் ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டர் ராஜாராமை தவிர்த்து இதர 8 போலீசாரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரை உடனடியாக கைது செய்ய உத்தரவிடப்பட்டது.
இதன் அடிப்படையில் சி.பி.சி.ஐ.டி. எஸ்பி வெங்கடசாமி தலைமையிலான தனிப்படையினர் பணி நீக்கம் செய்யப்பட்ட 9 போலீஸாரின் வீடுகளிலும் சோதனை நடத்தினார்கள்.
இதில் தொடர்புடைய பணி நீக்கம் செய்யப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், காவலர்கள் சங்கர், செல்வக்குமார் ஆகியோர் சி.பி.சி.ஐ.டி. போலீஸாரிடம் கடந்த சனிக்கிழமை சரணடைந்தனர். இதையடுத்து அவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீதமுள்ள 6 பேரையும் பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் அவர்களது புகைப்படத்துடன் கூடிய அறிவிப்பினை எஸ்பி வெங்கடசாமி வெளியிட்டார்.
இந்நிலையில் எஸ்.பி. வெங்கடசாமி கூறும்போது, தலைமறைவாகியுள்ள பணி நீக்கம் செய்யப்பட்ட போலீசார் சரணடையவில்லை. அவர்களை தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கிறோம். பொதுமக்கள் பார்த்து தகவல் தெரிவிப்பார்கள். விரைவில் கைது செய்ய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்றார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications